ஷட்தர்சனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்[தொகு]

     இந்து சமயத்தில் உள்ள ஆறு வகை தத்துவ ஞானக் கொள்கைகளை கூறும் நூல்களுக்கு ஷட்தர்சனங்கள் எனப் பெயர்.
   
 பொதுவாக உயிர், உலகம், இறைவன் ஆகிய முப்பொருளையும் பற்றி தரிசன கர்த்தாக்கள் நன்றாக ஆராய்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கையான முடிவுக்கு வந்தனர். நியாய தரிசனம் கெளத முனிவராலும, வைசேஷிகம் காணாத முனிவராலும், சாங்கியம் கபிலமகரிஷியாலும், யோகம் பதஞ்சலி மகரிஷியாலும், பூர்வமீமாம்சா ஜைமினி மகரிஷியாலும், உத்தரமீமாம்சா பாதராயணர் என்ற வேதவியாச பகவானாலும் ஆக்கப் பெற்றவையாகும். ஆறு கொள்கைகளும் வேதக் கருத்துக்களைத் தழுவியே எழுந்தனவாம். நியாயமும் வைசேஷிகமும் வேதக் கொள்கைகளை முற்றிலும் பின்பற்றவில்லை. மற்றைய நான்கும் வேதங்களை முற்றிலும் தழுவிய போதிலும் இறுதியான பூரண வளர்ச்சியுற்ற ஆராய்ச்சி என்று உத்தரமீமாம்சை ஒன்றையே கூற முடியும். அது வேதாந்த தரிசனம் என்றும் கூறப்படும.
 1. மேற்கோள்:
   இந்து சமயம் உயர்நிலை பாடநூல்
   ஹிந்து தர்மா வித்யாபீடம்
   வென்னிமலை, 
   கன்னியாகுமரி மாவட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷட்தர்சனங்கள்&oldid=2376547" இருந்து மீள்விக்கப்பட்டது