புதுவை 7 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Anbumunusamy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:48, 11 சூலை 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவல் பெட்டகம் புதிய நெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
புதுவை - 7
PY 7
வேளாண் பெயர்
அன்னலட்சுமி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 155 நாட்கள்
மகசூல்
5500 கிலோ எக்டேர்
வெளியீடு
2007
வெளியீட்டு நிறுவனம்
புதுவை வேளாண் அறிவியல் நிலையம்
மாநிலம்
புதுச்சேரி
நாடு
 இந்தியா[1]

பி ஒய்- 7 (PY 7) (வேளாண் வழக்கு அன்னலட்சுமி (Annalakshmi) எனப்படும் இந்த நெல் இரகம், புதுச்சேரி நெல் வகையாகும்.[1]

வெளியீடு

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 2007 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

காலம்

கூடுதல் குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் குறுகியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

சாகுபடி

பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

  • இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை (5, 5 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இந்த நெற்பயிர், தண்டு துளைப்பான் மற்றும் இலைசுருட்டு புழு ஆகியவைகளை எதிர்த்து வளரக்கூடியதாகும்.
  • நடுத்தர மெல்லிய, வெள்ளை அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "P.K. Krishi Vigyan Kendra PuducherryVarieties developed and released: -" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவை_7_(நெல்)&oldid=2551727" இலிருந்து மீள்விக்கப்பட்டது