கோவை - 52 (எம் ஜி ஆர் - 100) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ-52 (எம்ஜிஆர்-100)
CO-52 (MGR-100)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பிபீடீ-5204 x கோ-(ஆர்)-50
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
6,879 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
2017
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

கோ - 52 (CO - 52) எனப்படும் இந்த நெல் வகையானது, தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் எம்ஜிஆர் - 100 என பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டதாகும். பி பீ டீ - 5204 மற்றும் கோ - (ஆர்) - 50 (BPT 5204 / CO (R) 50) நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இது, தமிழ்நாட்டின் உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் வகையாகும்.[1]

வெளியீடு[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2017 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிட்டது.[1]

காலம்[தொகு]

மத்திய, மற்றும் நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] மேலும் இதுபோன்ற நெற்பயிர்கள் சாகுபடி செய்ய, சம்பா, முன் சம்பா, பின் சம்பா, பிசாணம், பின் பிசாணம், மற்றும் தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாகும்.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "TNAU to release 'MGR 100' today". www.thehindu.com (ஆங்கிலம்) - UPDATED: NOVEMBER 29, 2017 08:18 IST. பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
  2. Rice Seasons of Tamil Nadu