மாப்பிள்ளைச் சம்பா
மாப்பிள்ளைச் சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
155 – 160 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
மாப்பிள்ளைச் சாம்பா (Mapillai Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு வழக்கிழந்த நெல் வகைகளில் ஒன்றாக கருதப்படும் இது, தனது தன்மையின் பெயரே உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]
முற்காலத்தில் திருமணம் செயதுகொள்ளும் இளைஞனான மணமகன் (மாப்பிள்ளை), திருமணத்திற்கு முன் தனது பலத்தை நிருபிக்கும் வகையில் இளவட்டக் கல்லை தூக்கும் வழக்கம் தமிழர்களின் மரபுகளில் ஒன்றாக இருந்துள்ளது. ஆகவே திருமணத்திற்கு முன்னதாக உடல்வலிமையை அதிகரிக்கக்கூடிய இந்நெல்லின் அரிசியில் உருவாக்கப்பட்ட பலகாரங்களை மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1][2]
பருவம்
[தொகு]நீண்டகால (155 - 160) நெல் வகையான இது, சூலை 15 முதல் சனவரி 14 முடிய சம்பா பருவத்திலும், மற்றும் செப்டம்பர் 15 முதல் பிப்ரவரி 14 வரையான பின் சம்பா பருவத்திலும் பொதுவாக பயிரிடப்படுகிறது.[1][3]
குறிப்புகள்
[தொகு]- இதன் நெற்பயிர்கள், களிமண் மற்றும் மணற்கலந்த களிமண் போன்ற நிலங்களில் சுமார் 120 செமீ உயரத்திற்கு வளர்கிறது.
- சொரசொரப்பான தானியத்தை கொண்டுள்ள இதன் அரிசி சாம்பல் கலந்த செந்நிறமாக காணப்படுகிறது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu - Mapillai Samba". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- ↑ "Mappillai Samba: The Forgotten Treasure of Health". practo.com (ஆங்கிலம்) - 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
- ↑ 3.0 3.1 "Mappillai Samba - Season". nammanellu.com (ஆங்கிலம்) - 2018 - 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.