சிவப்பு சித்திரை கார் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு சித்திரை கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
1500 - 1800 கிலோ ஏக்கருக்கு
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

சிவப்பு சித்திரை கார் (Sivappu Chithiraikar)[1] எனக்கூறும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி பகுதியில் பிரதானமாக பயிரிடப்படும் இந்நெற்பயிர், ஒரு ஏக்கருக்கு குறைந்தது 600 கிலோ முதல் 900 கிலோ வரையிலும், முறையான பருவமழைக் காலத்தில் 1500 கிலோ முதல் 1800 கிலோ வரையிலும் தானிய மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது. மேலும் இப்பருவத்தில் மற்ற இரகங்களைவிட, தமிழக விவசாயிகள் இந்த இரகத்தினையே அதிகம் விரும்பி பயிரிடுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.[2]

பருவகாலம்

குறுகியக்கால பயிரான 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை, செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (ஆவணியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[2] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[3]

வளருகை

இந்த நெல்லின் மேல் தோல் கருப்பு நிறத்திலும், இதன் அரிசியின் மேல் தோல் சிவப்பு நிறத்திலும், காணப்படுகிறது. வறட்சியைத் தங்கி வளரக்கூடிய சிவப்பு சித்திரை கார், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. 111. Sivappu chithiraikar
  2. 2.0 2.1 2.2 "Traditional Varieties grown in Tamil nadu - Sivappu Chitraikar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்