பெப்ரவரி 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிப்ரவரி 21 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | பெப்ரவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | ||
| MMXIII | ||||||
பெப்ரவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 52 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1440 - புரூசியக் கூட்டமைப்பு உருவானது.
- 1613 - முதலாம் மிக்கையில் ரஷ்யாவின் சார் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
- 1804 - நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
- 1848 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
- 1907 - நெதர்லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- 1918 - கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்தது.
- 1937 - முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனல் போர் முடிவுக்கு வந்தது.
- 1947 - எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
- 1952 - கிழக்கு பாகிஸ்தானின் டாக்காவில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.
- 1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
- 1963 - லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1965 - மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1972 - சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது.
- 1973 - சினாய் பாலைவனத்தில் இஸ்ரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பெர் கொல்லப்பட்டனர்.
- 1974 - சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்ரேலியப் படைகள் வெளியேறின.
- 2013 - இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உரிரிழந்தனர்.
பிறப்புகள் [தொகு]
- 1878 - அன்னை, இந்திய ஆன்மிகவாதி (இ. 1973)
- 1895 - கார்ல் பீட்டர் ஹென்ரிக் டாம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)
- 1907 - எம். ஆர். ராதா, நகைச்சுவை நடிகர் (இ. 1979)
- 1924 - ராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் முதலாவது அதிபர்
இறப்புகள் [தொகு]
- 1889 - இன்னாசித்தம்பி, யாழ்ப்பாணம் சில்லாலை புகழ்பெற்ற சுதேச வைத்தியர்
- 1926 - ஹெயிக் ஓனெஸ், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர், (பி. 1853)
- 1941 - பிரெடெரிக் பாண்டிங், நோபல் பரிசு பெற்ற கனடியர் (பி. 1891)
- 1965 - மல்கம் எக்ஸ், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (பி. 1925)
- 1968 - ஹோவார்ட் ஃபுளோரி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)
- 1984 - மிகயில் ஷோலகொவ், நோபல் பரிசு பெற்ற இரசிய எழுத்தாளர், (பி. 1905)
- 1999 - கேர்ட்ரட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1918)
சிறப்பு நாள் [தொகு]
- மொழிப்பற்றாளர் நாள் - வங்காள மொழி பேசுபவரினால் கொண்டாடப்படும் நாள்
- அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ