சாந்தி சுவரூப் பட்நாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாந்தி சுவரூப் பட்நாகர்
Shanti Swaroop Bhatnagar.jpg
சாந்தி சுவரூப் பட்நாகர்
பிறப்பு பெப்ரவரி 21, 1894(1894-02-21)
பிறப்பிடம் பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு ஜனவரி 01 1955 (அகவை 60)
இறப்பிடம் புது தில்லி, இந்தியா
வாழிடம் இந்தியா
குடியுரிமை இந்தியா
தேசியம் Flag of India.svg இந்தியர்
கல்வி கற்ற இடங்கள் பஞ்சாப் பல்கலைக் கழகம்
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
ஆய்வு நெறியாளர்   பிரடெரிக் டொனன்
அறியப்படுவது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்

எஸ். எஸ் பட்நாகர் என்றறியப்படும் சாந்தி சுவரூப் பட்நாகர்(Sir Shanti Swaroop Bhatnagar:இந்தி: , OBE, FRS, 21 பிப்ரவரி, 1894 – 1 ஜனவரி, 1955) ஒரு நன்கறியப்பட்ட இந்திய இயற்பியலாளரும் அறிவியலறிஞரும் ஆவார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். 1894 இல் தற்போது பாகிஸ்தானிலுள்ள ஷாப்பூர் எனுமிடத்தில் பிறந்தவர். ஓர் ஆங்கிலேய நிறுவனம் எண்ணெய்க் கிணறு தோண்டும்போது ஏற்பட்ட தொழில் நுட்பச் சிக்கலை எளிய முறையில் தீர்த்து வைத்தவர். இந்தியாவில் ஆய்வு மையங்கள் தோன்றக் காரணமானவர். பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கு வழிமுறைகள் கண்டறிந்தவர். இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றவர். இவருடைய பெயரால் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]