உள்ளடக்கத்துக்குச் செல்

குருவிக்கார் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருவிக்கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

குருவிக்கார் (Kuruvikar) பாரம்பரிய நெல் இரகங்களில் அதிக மகசூல் தரக்கூடிய நெல் இரகமாகும். இது பழுப்பு நிற அரிசியுடனான, மோட்டா (தடித்த) இரகமாகும். ஏனைய பாரம்பரிய நெல் இரகங்களைப் போலவே வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி வளரக்கூடிய குருவிக்கார் நெல், இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் எடுத்துக்கொண்டு வளரும் தன்மையுடையது. இவ்வகை நெற்பயிரில் சொரசொரப்புடனான கடினத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதலிலிருந்து காக்கப்படுவதோடு, களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.[1]

தமிழ்நாடு முழுவதும்

[தொகு]

ஒரு ஏக்கருக்கு இருபத்தைந்து முதல் முப்பது மூட்டைவரையில் மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் இரகம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுவதோடு, தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. பழுப்பு நிற அரிசியுடன் கூடிய மோட்டா (தடித்த) இரகமான குருவிக்கார், பெரும்பாலும் இட்லி, தோசை, இடியாப்பம், முறுக்குப் போன்ற பலகாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டு விசேடங்களில் விருந்துக்கு இந்த இரக அரிசியை சம்பிரதாயமாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், இதன் அவல் மிக ருசியாகவும், இதனன் பழைய சாதம் நெடுநேரம் தாங்கக்கூடியதாக இருப்பதோடு, இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "நம் நெல் அறிவோம்: பலத்தைக் கொடுக்கும் குருவிக்கார் ". தி இந்து (தமிழ்) - சூன் 13, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிக்கார்_(நெல்)&oldid=3722434" இலிருந்து மீள்விக்கப்பட்டது