தேங்காய்ப்பூ சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேங்காய்ப்பூ சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 – 140 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே மிகவும் வித்தியாசமான நெல் இரகமான இது, மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையேயான இந்திய எல்லையின் ஓரமாக இச்சா ஆறு பாயும் பகுதியில் தேங்காய்ப்பூ சம்பா என்ற இந்த பாரம்பரிய நெல் இரகம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வங்க மொழியில் வேறுபெயரில் அழைக்கப்படும் இவ்வகை நெல், பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது.[1]

பொரி நெல்

மேற்கு வங்கத்தில் பிரபலமான இந்த நெல் இரகம், தமிழகத்திலும் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டது. மணல், மணல் சார்ந்த பகுதிக்கும் கடலோரப் பகுதிக்கும் ஏற்ற இரகமாகவும் உள்ள இது, நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது. கொஞ்சம் சாயும் தன்மையுடன் இருந்தாலும், அறுவடையில் பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது. தமிழகத்தில் பொரி பயன்பாடு அதிகம் அதிகளவில் இருப்பதால், அதற்கான புதுப்புது இரகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங் களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பாரம்பரிய நெல் இரகங்களில் பொரிக்கு ஏற்ற இரகமாக, தேங்காய்ப்பூ சம்பா இருக்கிறது.[1]

மோட்டா இரகம்

பொதுவாக நெல் மணிகள், இதழ் இதழாக இருக்கும். ஆனால், தேங்காய்ப்பூ சம்பா கொத்துக் கொத்தாக இருக்கிறது. தமிழகக் கடலோர மாவட்டங்களில் இந்த நெல்லை சாகுபடி செய்து, பொரி தயாரிப்புக்கும், உணவுக்கும் பயன்படுத்துகிறார்கள். மஞ்சள் நிறத்தாலான இந்நெல், வெள்ளை அரிசியுடன் கூடிய மோட்டா (தடித்த) இரகமாகும். நடவு செய்யவும், தெளிக்கவும் ஏற்ற இது, ஏக்கருக்கு இருபத்து ஐந்து கிலோ விதை போதுமானது. மேலும், ஒரு ஏக்கருக்கு இருபத்தி இரண்டு மூட்டைவரை மகசூல் கிடைக்கக்கூடியது.[1]

பருவகாலம்

மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த தேங்காய்ப்பூ சம்பா, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சம்பா பட்டம் எனப்படும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இரகமாகும்.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "நம் நெல் அறிவோம்: பொரிக்கு ஏற்ற தேங்காய்ப்பூ சம்பா". tamil.thehindu.com (தமிழ்). © September 12, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04. {{cite web}}: Check date values in: |date= (help); Text "நெல் ஜெயராமன்" ignored (help)
  2. பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்