சிகப்பி (நெல்)
Appearance
சிகப்பி | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | சி. ஆர். 1009 |
பயிரிடும்வகை | வேளாண் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
தோற்றம் | 2013, சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா |
சிகப்பி என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, சி. ஆர். 1009 என்கிற நெல் ரகத்தில், வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய மரபணுவைச் சேர்த்து, பாரம்பரியப் பயிர் இனவிருத்தி மூலம், இந்த நெல் வகை உருவாக்கப்பட்டுள்ளது.
வெளியீடு
[தொகு]தமிழக கடலூர் மாவட்டத்தின், சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறை 2013 இல் அறிமுகப்படுத்தியது. அதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணைவேந்தர் எம். ஏ. எம். ராமசாமியின் மனைவியார் சிகப்பி ஆச்சியின் பெயரைச் சூட்டியுள்ளனர். [1]
சாகுபடி
[தொகு]இந்த இரகம் நீர்ப்பாசன வசதியுள்ள கடலூர் மாவட்ட விவசாயிகளால் தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பழையன்னூர் வட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் ரகம் சுமார் 10 நாட்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தாலும், அழுகிப் போகாது.
- இதன் தானியமணிகள் தடிமான அளவில் உள்ளது.
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ ந. வினோத் குமார் (4 நவம்பர் 2017). "'சிகப்பி'க்கு 'பச்சை' கிட்டுமா..?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2017.