ஆகஸ்டு 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்ட் 7 கிரிகோரியன் ஆண்டின் 219வது நாளாகும். நெட்டாண்டுகளில் 220வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 322 - மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1461 - மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
- 1819 - கொலம்பியாவின் "பொயாக்கா" என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.
- 1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- 1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
- 1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
- 1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.
- 1944 - திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
- 1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.
- 1960 - கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
- 1998 - தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1925 - எம். எஸ். சுவாமிநாதன், இந்திய அறிவியலாளர்
- 1933 - வைஜயந்திமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
- 1948 - கிறெக் சப்பல், ஆஸ்திரேலியத் துடுப்பாளர்
- 1966 - ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியாவை ஆரம்பித்தவர்
இறப்புகள் [தொகு]
- 1941 - இரவீந்திரநாத் தாகூர், மகாகவி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)
சிறப்பு நாள் [தொகு]
- கோட் டி ஐவரி - விடுதலை நாள் (1960)