ஆகஸ்டு 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 14 கிரிகோரியன் ஆண்டின் 226வது நாளாகும். நெட்டாண்டுகளில் 227வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 139 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1248 - உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
- 1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
- 1908 - முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.
- 1912 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.
- 1921 - தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.
- 1937 - ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 1945 - பசிபிக் போர் முடிவுற்றது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.
- 1947 - பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.
- 1969 - வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
- 1972 - கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 - போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
- 2006 - இஸ்ரேல் - லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
- 2006 - முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
- 2007 - ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1867 - ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர் (இ. 1933)
- 1911 - வேதாத்திரி மகரிஷி, இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 2006)
- 1959 - மேஜிக் ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1941 - போல் சபாடியே, பிரெஞ்சு வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1854)
- 1953 - க. சிவபாதசுந்தரனார், யாழ்ப்பாணம் புலோலியூர் சைவப் பெரியார் (பி. 1878)
- 1958 - பிரெட்றிக் ஜோலியோ, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
- 1979 - என். எம். பெரேரா, இலங்கையின் மாக்சியவாதி
- 2004 - செஸ்லோ மிலோஸ், போலந்து எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
- 2007 - இராம. திரு. சம்பந்தம், தினமணி முன்னாள் ஆசிரியர்
சிறப்பு நாள் [தொகு]
- பாகிஸ்தான் - விடுதலை நாள் (1947)
- கொங்கோ - விடுதலை நாள் (1960)
- பராகுவே - கொடி நாள்