விலாஸ்ராவ் தேஷ்முக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலாஸ்ராவ் தேஷ்முக் (மராட்டி: विलासराव देशमुख, பிறப்பு மே 26, 1945) காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான தேஷ்முக் முதலாக 1999 முதல் 2003 வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2004இல் நவம்பர் 1ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 டிசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகினார். அதை தொடர்ந்து 2008 டிசம்பர் 8 ல் அசோக் சவான் மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், ரித்தேஷ், இந்தி திரைப்படத்துறையில் நடிகர் ஆவார்.