முகம்மது முர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது முர்சி
محمد مرسي


பதவியேற்பு
சூலை 1, 2012
பிரதமர் கமல் கன்சூரி
முன்னவர் ஓசுனி முபாரக்
முகம்மது உசைன் தந்தவி (பொறுப்பு)

பதவியில்
ஏப்ரல் 30, 2011 – சூன் 24, 2012
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
அரசியல் கட்சி விடுதலை மற்றும் நீதிக் கட்சி

பிறப்பு ஆகஸ்ட் 1951 (அகவை 63)
பயின்ற கல்விசாலை கெய்ரோ பல்கலைக்கழகம்
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
சமயம் சுன்னி இஸ்லாம்

முனைவர். முகம்மது முர்சி (Dr. Mohamed Morsi அரபு மொழி: محمد مرسى عيسى العياط) ஓர் எகிப்திய அரசியல்வாதி. 2000ஆம் ஆண்டு முதல் 2005 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2011 எகிப்திய புரட்சிக்குப் பின்னர் முசுலிம் சகோதரத்துவம் நிறுவிய அரசியல் கட்சியான விடுதலை மற்றும் நீதிக் கட்சியின் (FJP) தற்போதையத் தலைவராக ஏப்ரல் 30, 2011 முதல் உள்ளார். [1] தனது கட்சியின் சார்பில் 2012 எகிப்திய குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முதல் சுற்றில் தகுதி பெற்றுள்ளார். சூன் மாதத்தில் நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்தல் இவருக்கும் அகமது சபீக்கிற்கும் இடையே நடந்தது.[2]

சூன் 24, 2012இல் எகிப்தின் தேர்தல் ஆணையம் குடியரசுத் தேர்தலில் முர்சி வெற்றி பெற்றதாக அறிவித்தது. முர்சிக்கு 51.7 சதவீத வாக்குகளும் எதிர்த்துப் போட்டியிட்ட சபீக்கிற்கு 48.3 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "شورى الإخوان" يسمي د. مرسي رئيسًا لـ"الحرية والعدالة". إخوان اون لاين، 2011-4-30. وصل لهذا المسار في 1 مايو 2011.
  2. "Egypt’s presidential election: The sins of the Muslim Brotherhood". Mohamed ElMasry. The Egyptian Gazette (மே 30, 2012). பார்த்த நாள் மே 30, 2012.
  3. "Muslim Brotherhood candidate Morsi wins Egyptian presidential election". Fox News.com. பார்த்த நாள் 24 June 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_முர்சி&oldid=1670890" இருந்து மீள்விக்கப்பட்டது