கோல்ன் கதீட்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொலோன் கதீட்ரல்*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Cologne Cathedral.jpg
நாடு ஜெர்மனி
வகை பண்பாடு
ஒப்பளவு i, ii, iv
மேற்கோள் 292
பகுதி ஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1996  (20வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

கொலோன் கதீட்ரல் (Cologne Cathedral, ஜேர்மன்: Kölner Dom) என்பது ஜேர்மனியின் கொலோன் நகரில் உள்ள கத்தோலிக்க ஆயரின் இருப்பிடமாகும். இத்தேவாலயம் சென் பீட்டர் மற்றும் கன்னி மரியாள் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இத்தேவாலயம் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. உலகின் பெரும் கிறிஸ்தவத் தேவாலயங்களில் ஒன்று. 1880-84 காலப்ப்பகுதியில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகவும் இது இருந்திருக்கிறது. இதன் கட்டிட வேலைகள் 1248 இல் ஆரம்பித்திருந்தாலும் 1880இலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது 144.5 மீட்டர்கள் நீளமானதும், 86.5 மீ அகலமானதும் ஆகும். இதன் இரண்டு கோபுரங்களும் 157 மீ உயரமாகும்.[1]

[தொகு] உசாத்துணை

  1. கொலோன் கதீட்ரல் இணையதளம்

[தொகு] படத்தொகுப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ன்_கதீட்ரல்&oldid=1122075" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்