சுனிதி சௌஹான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுனிதி சௌஹான்
Sunidhi chauhan

பின்னணித் தகவல்கள்
பிறப்பு 14 ஆகத்து 1983 (1983-08-14) (அகவை 28)
புது தில்லி, இந்தியா
பிறப்பிடம் இந்தியர்
இசை வகை(கள்) பின்னணிப் பாடகர், இந்தி பாப்
தொழில்(கள்) பாடகர்
இசைக்கருவிகள் பாடகர்
இசைத்துறையில் 1996–லிருந்து

சுனிதி சௌஹான் (Sunidhi chauhan, ஆகஸ்ட் 14, 1983) வணிக ரீதியான இந்தி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் முக்கிய பின்னணிப் பாடகர் ஆவார். சுனிதி ஷௌஹான் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பதினான்கு முறை பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் மூன்று முறை வென்றுள்ளார். மேலும் இரண்டு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும், இரண்டு ஐபா விருதுகளையும் மற்றும் ஒரு ஜீ சினி விருதையும் பெற்றுள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] ஆரம்பக்கால வாழ்க்கை

சுனிதி ஷௌஹான் முதல் பாடலைத் தம் நான்காவது வயதில் பாடினார்.1996-ம் ஆண்டு "மெரி ஆவாஸ் சுனோ" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமது "ஐர க்ஹைர னது க்ஹைர" ஆல்பத்திற்க்காக வெற்றிப்பெற்றார். அது குழந்தைகளுக்கான ஆல்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தன் அடையாளத்தை இழந்தது. இது பற்றி சுனிதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

எனது முதல் பாடல் வெற்றியைத் தரவில்லை .மேற்கொண்டு பாடல்கள் பாட என் மனதைத் தயார்படுத்திக்கொண்டேன்

"மேரி அவாஸ் சுனொ" ஆல்பத்திற்காக சுனிதி ஹௌஹான் வென்றப்போது லதா மங்கேஸ்கர் பரிசளித்த காட்சி.

சுனிதி தம் முதல் பின்னணிப் பாடலை பாலிவுட் திரைப்படமான சாஸ்த்ரா-வில் பாடினார். தம் பத்தொன்பதாவது

வயதிற்குள் 350 பாடல்களைப் பாடி முடித்திருந்தார்.

[தொகு] திருப்பமும்,பிற்காலத் தொழில்வாழ்க்கையும்

சுனிதி சௌஹான் தொழில்வாழ்வின் முதல் திருப்பம் மஸ்த் திரைப்படத்தில் "ருக்கி ருக்கி சி ஜிந்தகி" எனும் பாடலை பாடியதற்காக கிடைத்தது.விண்டோஸ் விஸ்டாவிற்காக சுனிதி சௌஹான் விஸ்டா பாடல் ஒன்றை பாடினார்.இப்பாடல் ஹிந்தி,ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாரானது. டிஸ்னி திரைப்படமான "ஹை ஸ்கூல் ம்யுசிகல்" எனும் திரைப்படத்தின் ஹிந்தி மொழி மாற்றத்தில் வனேசா ஆன் ஹுட்கன் பாடிய பாடலை பாடினார்.மேலும் அவர் ஆங்கிலப் பாடலான "ரீச் அவுட்"யும் பாடியிருக்கிறார். "Chhaliya" (Tashan), "Rock Mahi," "Lucky Boy," "Desi Girl" (Dostana), "Dance Pe Chance" (Rab Ne Bana Di Jodi), மற்றும் "Race Saanson Ki" (Race)(இந்த பாடலிற்காக "கேள்வினடோர் ஜிஆர்8! ப்லோ உமன் அவார்ட் 2009" வென்றார்.) ஆகிய பாடல்களால் 2008-ம் ஆண்டு சிறந்த ஆண்டாக கருதப்படுகிறது. இவரது உரத்த குரலால் இவர் "செவ்ரோலேட் GIMA (குளோபல் இந்தியன் மியூசிக் அவார்ட்ஸ்)" விருதினை சிறந்த நேரடி பெண் பாடகிக்காக பெற்றுள்ளார்.

ஏப்ரல் 2010 -ல் சௌஹான் இந்தியன் இடோல் 5 ல் ஒரு நடுவராக இருந்தார்.அனு மாலிக் மற்றும் சலீம் மெர்ச்சன்ட் ஆகியோர் மற்ற இரு நடுவர்களாவர்.மேலும் இந்தியன் இடோல் 6இலும் அவர் நடுவராக இருக்க உள்ளார்.இது ஜூன் 1 ,2012 -ல் துவங்க உள்ளது.

சுனிதி சௌஹான் பிட்புல்,ஜான் லேடெந்து, கே'நான் மற்றும் அலிசியா கேய்ஸ் ஆகியோருடன் இணைந்து வெஸ்டேர்ன் யுனியன்-னின் உலக நலத்திற்கான நிதி திரட்டலுக்காக பாடியுள்ளார்.அவர் "கால் மீ" மற்றும் "வேலன்டைன்" ஆகிய இரு ஆங்கிலப் பாடல்களையும் பாடியுள்ளார்.அதற்கான பணத்தை மும்பையிலுள்ள உதவியற்ற பெண்களுக்கு அளித்துவிட்டார்.

[தொகு] திரைத்துறை

சுனிதி சௌஹான் அல்கா யாக்னிக் ,உதித் நாராயணன் மற்றும் சுக்விந்தர் சிங்க் (ஓம்காரா மற்றும் ஆஜா நச்சலே ஆகிய படங்களில்) ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.அவர் பெரும்பாலும் சோனு நிகத்துடனே இணைந்து பாடியுள்ளார்.அவர் ஷ்ரேயா கோஷல்-க்கு போட்டியாளராக கருதப்படுகிறார்.பாகிஸ்தானி பாடகர் பாக்ஹிர் மெஹ்மூத்துடன் அவரின் ஆல்பம் மந்த்ராவிற்காக மெல்லிசை பாடல் ஒன்று பாடியுள்ளார்.மேலும் அவர் ஏந்ரிஃஉஎ இக்லேசியஸ்-உடன் இணைந்து "ஹார்ட்பீட் (இந்திய மிக்ஸ்)" எனும் பாடலையும் பாடியுள்ளார்.

அவர் ஜெய்தீப் சாஹ்னி, இர்ஷாத் கமில், குல்சார் , சமீர், பிரசூன் ஜோஷி, ச்வனாந்து கிர்கிரே, தி லேட் ஆனந்த் பாக்ஷி மற்றும் ஜாவேத் அக்தர் ஆகிய பாடலசிரியர்களுடனும்,வண்டேமடாராம் ஸ்ரீநிவாஸ், பப்பி லஹிரி, A. R. ரஹ்மான், இளையராஜா, யுவன், ஹிமேஷ் ரேஷம்மியா, அனு மாலிக், ஜடின் லலித், ஷங்கர்-இஷான்-லாய், ப்ரிடம்,சக்ரபோர்ட்டி, ராஜேஷ் ரோஷன், நதீம்-ஷ்ரவன், ஆனந்த்-மிலிந்த், விஷால்-ஷேக்கார், M. M. கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

சுனிதி சௌஹான் ஹிந்தி திரைத்துறையிலுள்ள முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் பாடகிகளுள் முக்கியமானவராவார்.அவர் மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய்,பிரீத்தி சிந்தா, ராணி முகர்ஜி, கரீனா கபூர், பிபாசா பாசு, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, கொன்கொனா சென் ஷர்மா ஆகியோருக்கும் மற்றும் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.மேலும் அவர் முன்னாள் நடிகைகளான ரேகா ஆகியோரின் குரல்களுக்காகவும் பாடியுள்ளார்.அவரின் பின்னணி குரல் இருபெரும் முன்னணி நடிகைகளான கஜோல்க்காக பானா படத்திலும்,மாதுரி தீட்சித்க்காக ஆஜா நச்சலே படத்திலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

2011 ம் ஆண்டு சுனிதி சௌஹான் உலக அளவிலான பாப் பாடல்கள் பாடும் முதல் இந்திய பெண்மணி எனும் சிறப்பை பெற்றார்.

[தொகு] சிறப்பு தோற்றம்

அக்டோபர் 2008 ம் ஆண்டு சுனிதி ஷௌஹான் ஸ்டார் வாய்ஸ் ஆப் இந்தியா நடத்திய பாடல் போட்டியில் இசையமைப்பாளர் அஷு துருவ் உடன் இணைந்து அவர்களின் படமான துரோணாவை ப்ரொமோட் செய்வதற்காக தோன்றினார். சுனிதி ஷௌஹான் இந்தியா ரேடியோ சிட்டி 91.1 பிம்பலையின் நியூ மார்னிங் ஷோ, ம்யுசிகல்-இ-அசாம்-க்காக சிறப்பு ஆர்.ஜேவாக பங்கேற்று குனால் கஞ்சவாலா, தலேர் மேஹெண்டி, சுக்விந்தர் , அட்னன் சமி மற்றும் குல்சார் ஆகியோரின் விருப்பங்களைப் பற்றி உரையாடினார்.

படிமம்:Suniatmiss2011.jpeg
சுனிதி சௌஹான் மிஸ் இந்தியா 2011-ல் நடத்திய மேடையேற்றம்.

சுனிதி ஷௌஹான் பெமினா மிஸ் இந்தியா 2011 போட்டி மற்றும் X-பெக்டர் இந்தியாவில் தம் பாடலான "ஹார்ட்பீட்"-ஐ உலக அளவிலான பாப் ஸ்டார் ஏந்ரிஃஉஎ இக்லேசியசின் ஆல்பமான ஐபோரியாவில் ப்ரொமோட் செய்வதற்காக மேடிஎற்றம் நடத்தியுள்ளார்.

[தொகு] திரைப்பட விவரங்கள்

எஹ்சாஸ் - எ பீலிங் (நவம்பர் 30, 2001-ல் ரிலீசானது.) (சிறப்பு தோற்றம்)

போட் (ப்ரோமோஷேனல் பாடலான போட் ஹூன் மெயினில் சிறப்பு தோற்றம்)

பஸ் ஏக் பல் (ப்ரோமோஷேனல் பாடலான தீமே தீமேவில் பாடகர் கே.கே-உடன் சிறப்பு தோற்றம்)

[தொகு] விருதுகளும் சிறப்புகளும்

ஆண்டு பிரிவு திரைப்படமும் பாடலும் முடிவு
பிலிம்பேர் விருதுகள்
2000 சிறந்த பின்னணிப் பாடகி "Ruki Ruki" (Mast) பரிந்துரை
2001 நம்பிக்கைக்குரிய வரவுக்கான R. D. புர்மன் விருது[1] வெற்றியாளர்
சிறந்த பின்னணிப் பாடகி "Mehboob Mere" (Fiza) பரிந்துரை
2005 சிறந்த பின்னணிப் பாடகி "Dhoom Machale" (Dhoom) பரிந்துரை
2006 சிறந்த பின்னணிப் பாடகி "Kaisi Paheli" (Parineeta) பரிந்துரை
சிறந்த பின்னணிப் பாடகி "Deedar De" (Dus) பரிந்துரை
2007 சிறந்த பின்னணிப் பாடகி "Beedi" (Omakara) வெற்றியாளர்
சிறந்த பின்னணிப் பாடகி "Soniye" (Aksar) பரிந்துரை
சிறந்த பின்னணிப் பாடகி "Aashiqui Main" (36 China Town) பரிந்துரை
2008 சிறந்த பின்னணிப் பாடகி "Aaja Nachle" (Aaja Nachle) பரிந்துரை
சிறந்த பின்னணிப் பாடகி "Sajnaji Vari Vari" (Honeymoon Travels Pvt. Ltd.) பரிந்துரை
2009 சிறந்த பின்னணிப் பாடகி "Dance Pe Chance" (Rab Ne Bana Di Jodi) பரிந்துரை
2010 சிறந்த பின்னணிப் பாடகி "Chor Bazari" ( Love Aaj Kal) பரிந்துரை
2011 சிறந்த பின்னணிப் பாடகி "Udi" ( Guzaarish) பரிந்துரை
சிறந்த பின்னணிப் பாடகி "Sheila Ki Jawani" ( Tees Maar Khan) வெற்றியாளர்
ஸ்டார் ஸ்கீரீன் விருதுகள்
2001 சிறந்த பின்னணிப் பாடகி Bhumro for Mission Kashmir பரிந்துரை
2004 சிறந்த பின்னணிப் பாடகி "Meri Zindagi Mein Aaye Ho for Armaan பரிந்துரை
2004 சிறந்த பின்னணிப் பாடகி Sajna Ve Sajna for Chameli வெற்றியாளர்
2005 சிறந்த பின்னணிப் பாடகி Dhoom Machale (Dhoom) பரிந்துரை
2006 சிறந்த பின்னணிப் பாடகி "Kaisi Paheli" (Parineeta) பரிந்துரை
2007 சிறந்த பின்னணிப் பாடகி Beedi Jalaile for Omkara வெற்றியாளர்
2008 சிறந்த பின்னணிப் பாடகி Sajnaji Vaari for Honeymoon Travels Pvt. Ltd. பரிந்துரை
2009 சிறந்த பின்னணிப் பாடகி Dance Pe Chance for Rab Ne Bana Di Jodi பரிந்துரை
2010 சிறந்த பின்னணிப் பாடகி Chor Bazari for Love Aaj Kal பரிந்துரை
2011 சிறந்த பின்னணிப் பாடகி Sheila Ki Jawani for Tees Maar Khan பரிந்துரை
அகில உலக இந்தியத் திரைப்பட விருது
2001 சிறந்த பின்னணிப் பாடகி Mehboob Mere for Fiza பரிந்துரை
2005 சிறந்த பின்னணிப் பாடகி] Dhoom Machale for Dhoom வெற்றியாளர்
சிறந்த பின்னணிப் பாடகிr Sajna Ve for Chameli பரிந்துரை
2006 சிறந்த பின்னணிப் பாடகி Kaisi Paheli for Parineeta பரிந்துரை
சிறந்த பின்னணிப் பாடகி Deedar De for Dus பரிந்துரை
2007 சிறந்த பின்னணிப் பாடகி Crazy Kiya Re for Dhoom 2 பரிந்துரை
சிறந்த பின்னணிப் பாடகி Beedi Jalaile for Omkara வெற்றியாளர்
2008 சிறந்த பின்னணிப் பாடகி Aaja Nachle for Aaja Nachle பரிந்துரை
2009 சிறந்த பின்னணிப் பாடகி Desi Girl for Dostana பரிந்துரை
ஜீ சினி விருதுகள்
2005 சிறந்த பின்னணிப் பாடகி Dhoom Machale for Dhoom வெற்றியாளர்
சிறந்த பின்னணிப் பாடகி Kaise Paheli Zindagi for Parineeta பரிந்துரை
2007 சிறந்த பின்னணிப் பாடகி Beedi Jalaile for Omkara பரிந்துரை
Apsara Awards
2005 சிறந்த பின்னணிப் பாடகி Dhoom Machale for Dhoom பரிந்துரை
2008 சிறந்த பின்னணிப் பாடகிr Aaaja Nachle (Aaja Nachle) பரிந்துரை
2011 சிறந்த பின்னணிப் பாடகி Ainvayi Ainvayi (Band Baaja Baaraat) பரிந்துரை
2011 சிறந்த பின்னணிப் பாடகி Sheila Ki Jawani (Tees Maar Khan) வெற்றியாளர்'
க்லோபல் இந்தியத் திரைப்பட விருதுக்ள்
2006 சிறந்த பின்னணிப் பாடகி Beedi Jalaile (Omkara) பரிந்துரை
2011 சிறந்த பின்னணிப் பாடகி Sheela ki jawani (Tees Maar Khan) வெற்றியாளர்
(Source: Bollywood Hungama)

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.imdb.com/name/nm0154298/awards
"http://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதி_சௌஹான்&oldid=1123331" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்