உள்ளடக்கத்துக்குச் செல்

ஒட்டடையான் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒட்டடையான்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
மகசூல்
சுமார் 1350 கிலோ ஒரு ஏக்கர்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஒட்டடையான் பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றான இது, காவிரியின் கழிமுக (டெல்டா) மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தில் மடுப் (சுனை) பகுதிகளில் இந்த நெல் சாகுபடி செய்யப்பட்டுவந்துள்ளது. 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக இந்நெல் இரகம் உழவரைவிட்டு விலகியாதாகவும், தற்போது காவிரியின் கடைமடைப் பகுதியில் சில உழவர்கள் சாகுபடி செய்துவருவதாகவும் கருதப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் (ஆடி மாதம்) விதைக்கப்படும் இவ்வகை நெல், மழை, வெள்ளம் வந்தாலும் தாங்கிக்கொண்டு ஆறடிவரை வளரக்கூடியது.[1]

பாரம்பரிய நெல் ரகங்களில், மிக அதிக நாட்களாக இருநூறு நாள் வயதுடைய இது. ஒட்டடை போன்று அழுக்கு நிறம் கொண்ட மஞ்சள் நிற நெல்லாகவும், கருஞ்சிவப்பு அரிசியாகவும் காணப்படுகிறது. ஏக்கருக்குக் குறைந்தபட்சம் பதினெட்டு மூட்டை (75 கிலோ) மகசூல் கிடைக்ககூடிய இந்நெல் இரகம், மற்றப் பாரம்பரிய இரகங்களைவிட ஐந்து மடங்கு கூடுதலாக வைக்கோல் தரக்கூடியது. நெல் மணி முற்றிய பிறகு சாயும் தன்மை கொண்ட இது, அறு வடையில் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "நம் நெல் அறிவோம்: இரண்டு மகசூல் தரும் ஒட்டடையான்". தி இந்து (தமிழ்) - சூன் 20, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டடையான்_(நெல்)&oldid=3722433" இலிருந்து மீள்விக்கப்பட்டது