இராசி (ஐ ஈ டி - 1444) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசி (ஐ ஈ டி - 1444)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பூர்வீக தைச்சுங் - கோ - 29
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
5600 கிலோ எக்டேர்
வெளியீடு
1978
மாநிலம்
அனைத்திந்தியா
நாடு
 இந்தியா

இராசி (ஐ ஈ டி - 1444) (Rasi (IET-1444) எனப்படும் இது; 1978 - 1982 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி (என்) 1 (T(N)1) எனும் நெல் இரகத்தையும், கோ. 29 (Co.29)[2] எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மானாவாரி, மற்றும் மேட்டு நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், 90 - 95 சென்டிமீட்டர் (90-95 cm)அரைக் குள்ளமாகவும், தானியங்கள், மிதமான சன்னமும் வெண்ணிறமாகவும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 5600 கிலோ (56 Q/ha) மகசூல் தரவல்ல இது, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, உத்திரப்பிரதேசம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. GENERAL ARTICLES[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Details of Rice Varieties: Page 1 - 40. Rasi (IET-1444)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசி_(ஐ_ஈ_டி_-_1444)_(நெல்)&oldid=3778575" இலிருந்து மீள்விக்கப்பட்டது