கோவை - 43 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ - 43
CO 43
கோ 43 நெற்பயிர்
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்தசல் x ஐ ஆர் - 20
(Dasal x IR 20)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1982, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 43 (நெல்) (CO 43) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் இனப் பெருக்க நிலையம் மூலம் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம், தசல் மற்றும் ஐ ஆர் - 20 (Dasal x IR 20) போன்ற நெல் இரகங்களிலிருந்து இணைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. இதன் சாகுபடி காலம் 135 நாட்கள் ஆகும். தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த நெல் ரகம் வளரும்.[2]

சிறப்பம்சங்கள்[தொகு]

இந்த நெல் இரகம் சன்ன ரக அரிசியாக இருக்கும். களர் மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது. வளர்ந்து சாயாதது. எக்டேருக்கு 5.3 டன்கள் விளைச்சல் தர வல்லது.[3] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கோ 43 பயிரிடப்படுகிறது .

இவற்றையும் காண்க[தொகு]


மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_43_(நெல்)&oldid=3605492" இலிருந்து மீள்விக்கப்பட்டது