ஆகஸ்டு 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 13 கிரிகோரியன் ஆண்டின் 225வது நாளாகும். நெட்டாண்டுகளில் 226வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 3114 - மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.
- 1415 - நூறு ஆண்டுப் போர்: இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் 8000 பேருடன் பிரான்சை அடைந்தான்.
- 1516 - புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் நேப்பில்சையும் பிரான்சின் முதலாம் பிரான்சிஸ் மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1536 - ஜப்பானில் கியோட்டோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் கியோட்டோவில் இருந்த 21 நிச்சிரன் கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.
- 1849 - யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.
- 1913 - ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.
- 1920 - போலந்து - சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.
- 1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.
- 1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.
- 1960 - மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1961 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
- 2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
- 2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
- 2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1899 - ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் (இ. 1980)
- 1926 - ஃபிடெல் காஸ்ட்ரோ, கியூபாவின் புரட்சியாளரும் அதிபரும்
இறப்புகள் [தொகு]
- 1910 - புளோரென்ஸ் நைட்டிங்கேல், ஆங்கிலத் தாதி (பி. 1820)
- 1917 - எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (பி. 1860)
- 1946 - எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1866)
சிறப்பு நாள் [தொகு]
- மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1960)
- அனைத்துலக இடக்கையாளர் நாள்