நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார் | |
---|---|
பிறப்பு | [1] காஞ்சிபுரம், தமிழ் நாடு, இந்தியா | சூலை 12, 1975
இறப்பு | 14 ஆகத்து 2016 சென்னை | (அகவை 41)
இறப்பிற்கான காரணம் | மஞ்சள் காமாலை |
பணி | பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் |
வாழ்க்கைத் துணை | ஜீவலஷ்மி[2] |
பிள்ளைகள் | மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி[2] |
நா. முத்துக்குமார் (Na. Muthukumar; 12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர்.[3] நான்கு வயதில் தாயை இழந்தவர்.[4] சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
கல்வி
[தொகு]காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரைப் படித்துத் தேறினார். பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இயல்பியல் பயின்று 88% மதிப்பெண் பெற்று அறிவியல் இளவர் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இவர் எழுதிய தூர் என்ற கவிதையே முதுகலையில் இவருக்குப் பாடமாக இருந்தது. பின்னர் "தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 1990 முதல் 2000 வரை" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார்.[5]
பணி
[தொகு]தொடக்கத்தில் திரைப்பட இயக்குநராக சென்னை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் இணைய விண்ணப்பித்தார். ஆனால், இடங்கிடைக்கவில்லை.[6]
எனவே, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். இயக்குநர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007),வாரணம் ஆயிரம் (2008) ஆகியன போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியிருந்த இவர் [7], 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.[8]
இவர் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியில் ஜீவலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலட்சுமி என்ற மகளும் இருந்தனர்.
மறைவு
[தொகு]2016 ஆகத்து 14 அன்று காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.[9][10]
இயற்றிய பாடல்களில் சில
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் |
---|---|---|
1999 | மலபார் போலீஸ் | கோலிவுட் முதல் |
மின்சார கண்ணா | ஓ அங்கில் | |
ஹலோ | சலாம் குலாமு | |
மானசீக காதல் | ஆனந்த காற்றே & கந்தா கடம்பா | |
ஊட்டி | ஓ லில்லி & ஓ வெண்ணிலா | |
இரணியன் | சந்திரனே சாட்சி & என் மாமன் மதுரை | |
உன்னருகே நானிருந்தால் | சின்ன சின்ன பூவே | |
2000 | வானத்தைப் போல | எங்கள் வீட்டில் எல்லா |
ஏழையின் சிரிப்பில் | சக்கரவள்ளி | |
ஜேம்ஸ் பாண்டு | கண்ணென்ன மின்சாரமா | |
வீரநடை | காலையிலே & முத்து முத்தா | |
சபாஷ் | தேங்க் யூ & உலகைச் சுற்றி | |
2001 | டும் டும் டும் | |
கலகலப்பு | அம்முரத கடலே | |
நந்தா | ஓர் ஆயிரம் யானை | |
லவ் மேரேஜ் | கண்ணாலே கொல்லாதே & கீரவாணி | |
2002 | விவரமான ஆளு | அடியே ஆரவள்ளி & ஏய் மாமா |
உன்னை நினைத்து | சாக்லெட் சாக்லெட் | |
ரன் | தேரடி வீதியில் | |
சமஸ்தானம் | பெண்ணே பெண்ணே | |
பகவதி | சாயோ சாயோ | |
ஏப்ரல் மாதத்தில் | கனவுகள் பூக்கும் | |
2003 | தூள் | கொடுவா மீசை |
வசீகரா | ஒரு தடவை, பூப்போல தீப்போல & வேணா வேணா | |
அன்பு | மணப்பொண்ணு அழகா | |
ஜூலி கணபதி | எனக்குப் பிடித்தப் பாடல் | |
ஸ்டூடண்ட் நம்பர் 1 | விழாமலே இருக்க முடியுமா, நா அழுக்கானாலும் அம்சமா, உன் குற்றமா, எங்கே செல்லும், சல்யூட் போடு, காலேஜ் கேன்டீன் & கடலோர கவிதையே | |
மிலிட்டரி | சிட்டுக்குருவி | |
சேனா | நாட்டுக்கோழி குழம்பு | |
வெல்டன் | இந்திய மேப்பை | |
அன்பே அன்பே | வாஸ்து சாஸ்திரம் | |
சாமி | திருநெல்வேலி அல்வாடா, பிடிச்சிருக்கு & வேப்பமரம் புளியமரம் | |
பார்த்திபன் கனவு | தீராத டும் | |
காதல் கொண்டேன் | தேவதையை கண்டேன், நெஞ்சோடு, தொட்டு தொட்டு & 18 வயதில் | |
விசில் | விசில் அடிக்கும் வதனா | |
ஆஹா எத்தனை அழகு | ஆட்டுக்குட்டி எல்லாம் | |
காதல் கிசு கிசு | ஆழும் வேலும் & அடடா | |
ஈர நிலம் | மேகம் கருக்குது | |
தென்னவன் | வினோதனே | |
திவான் | ஒரு தாலாட்டு | |
திருடா திருடி | ஆயுர்வேத அழகி | |
திருமலை | தாம்தக்க தீம்தக்க | |
பிதாமகன் | கொடி ஏத்தி வைப்போம் | |
ஜூட் | ஆடிவரும் அழகியே & கட்டபொம்மா கட்டபொம்மா | |
இன்று | பொன்மாலை, சோக்கா பாக்குற & சல்வார் பூவனம் | |
2004 | கோவில் | காலேஜிக்கு போவோம் |
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் | புதுக்கோட்டை சரவணன் | |
தென்றல் | பச்சைக்கிளி | |
வர்ணஜாலம் | மத மத மதன்னு | |
கில்லி | சூர தேங்கா | |
எதிரி | போடு நண்பா சக்க | |
அருள் | உக்கடத்து பப்படமே & புண்ணாக்குனு | |
ஜோர் | ஜோர் படா ஜோர் & மம்மி செல்லமா | |
சுள்ளான் | சண்டக்கோழி | |
அரசாட்சி | இப்படியே விட்டுவிடு | |
கிரி | அட்ரா சக்க, ரெண்டு காலுடா & ஒப்பனக்கார வீதியிலே | |
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி | சென்னை செந்தமிழ் | |
போஸ் | நிஜமா நிஜமா | |
7ஜி ரெயின்போ காலனி | அனைத்துப் பாடல்களும் | |
சத்திரபதி | ஒரே ஒரு ராத்திரிக்கு | |
மன்மதன் | வானமென்ன உயரங்காட்டு & காதல் வளர்த்தேன் | |
காதல் | அனைத்துப் பாடல்களும் | |
2005 | ஐயா | அத்திரி பத்திரி, அய்யாத்துரை (சோகம்) & தினம் ஐயானு |
தேவதையை கண்டேன் | மாமா பையா | |
ஜி | திருட்டு ராஸ்கேல் | |
மண்ணின் மைந்தன் | இது லேடீஸ் ஹாஸ்டல் | |
மாயாவி | காத்தாடி போலே | |
லண்டன் | கிமு கிபி | |
தக திமி தா | எத ஊத்தி செஞ்சேனோ, ராயல்சீம ராணி & சுலுக்கி சுலுக்கெடுக்கும் | |
சந்திரமுகி | கொக்கு பற பற | |
சச்சின் | கண்மூடி திறக்கும்போதே | |
ஜித்தன் | கோயமுத்தூர் பொண்ணு | |
அன்னியன் | காதல் யானை | |
இங்கிலீஸ்காரன் | அனைத்துப் பாடல்களும் | |
பிப்ரவரி 14 | லைலா மஞ்சு | |
ஏபிசிடி | யார் போட்ட கோலம் | |
தொட்டி ஜெயா | அச்சு வெல்லம் & தொட்டா பவரு டா | |
கஜினி | சுட்டும் விழி சுடரே | |
அன்பே வா | கால் கொலுசே, லொயலா & ஒலிப் லைலா | |
ஆணை | பிகருடன் ஒருநாள் | |
ஒரு கல்லூரியின் கதை | அனைத்துப் பாடல்களும் | |
ஆறு | சோடா பாட்டில், பாக்காதே என்ன, ஃப்ரியா விடு, நெஞ்சம் என்னும் & துரோகம் | |
சண்டக்கோழி | என்னமோ நடக்கிறதே & கும்தலக்கடி கும் | |
2006 | பரமசிவன் | ஆசை தோசை |
சரவணா | சா பூ த்ரி போட்டு | |
டிஷ்யூம் | கிட்ட நெருங்கிவாடி | |
கள்வனின் காதலி | ஏனோ கண்கள் | |
தம்பி | கனவா என்று, என் காதல், பூவனத்தில் மரம் & என்னம்மா தேவி ஜக்கம்மா | |
கோவை பிரதர்ஸ் | அனைத்துப் பாடல்களும் | |
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | இலையுதிர் காலம் & காதலைப் பிரிப்பது | |
தலைநகரம் | ஏதோ நினைக்கிறேன் & மதி மதி | |
புதுப்பேட்டை | அனைத்துப் பாடல்களும் | |
பாரிஜாதம் | உன்னைக் கண்டனே | |
ஆச்சார்யா | அனைத்துப் பாடல்களும் | |
தொடாமலே | தொட்டு தொட்டு & வெண்ணிலவே | |
உனக்கும் எனக்கும் | ஆகாயம் இத்தனை நாள், கிளியே கிளியே & பூப்பறிக்க நீயும் போகாதே | |
திமிரு | மானா மதுர & தித்திக்கிற வயசு | |
எம் மகன் | கல்லூரி ஜெனரேசன் | |
ஜாம்பவான் | பன மரத்துல | |
ஈ | காதல் என்பது | |
நெஞ்சிருக்கும் வரை | காதலியே & புடிச்சிருக்கு | |
திருவிளையாடல் ஆரம்பம் | கண்ணுக்குள் ஏதோ | |
வெயில் | 'சேத்துவடம்' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் | |
குமரன் | கோ கோ சகோ & சொர்க்கத்தில் பூக்கும் | |
2007 | போக்கிரி | வசந்த முல்லை |
தாமிரபரணி | தாலியே தேவையில்லை பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களும் | |
தீபாவளி | டோலு பஜே, காதல் வைத்து காதல் வைத்து & போகாதே போகாதே நீ | |
சபரி | 'ஒசாமா ஒசாமா' பாடலை தவிர்த்து அனைத்து பாடல்களும் | |
மணிகண்டா | ஹே முகுந்தா, இஞ்சி மறுப்பா & மாமா மாமா | |
திரு ரங்கா | மதுரவீர, என்னை ஏதோ & தகதிமி | |
நீ நான் நிலா | டார்லிங் ஓ டார்லிங், என் காதல் தெய்வ & உன்னை சந்தித்தேன் | |
சிவாஜி | பல்லேலக்கா.. காவிரி ஆறும் & சிவாஜி தீம் | |
வியாபாரி | வெற்றியை கண்டவன் | |
கிரீடம் | அனைத்து பாடல்களும் | |
பள்ளிக்கூடம் | இந்த நிமிடம் | |
சத்தம் போடாதே | அனைத்துப் பாடல்களும் | |
பிறகு | ||
மலைக்கோட்டை | கந்தா கடம்பா | |
கற்றது தமிழ் | அனைத்துப் பாடல்களும் | |
அழகிய தமிழ் மகன் | நீ மரிலின் மன்றோ & வளையப்பட்டி தவிலே தவிலே | |
பொல்லாதவன் | மின்னல்கள் கூத்தாடும் | |
வேல் | இந்த ஊரில், உன்ன போல, ஆயிரம் ஜன்னல், கோவாக்காரக்கிளியே | |
ஓரம் போ | 'ஓரம் போ தீம்' தவிர்த்து அனைத்துப் பாடல்களும் | |
எவனோ ஒருவன் | உனது எனது | |
கல்லூரி | அனைத்துப் பாடல்களும் | |
புலி வருது | அனைத்துப் பாடல்களும் | |
2008 | பீமா | முதல் மழை |
வாழ்த்துகள் | அனைத்துப் பாடல்களும் | |
வெள்ளித்திரை | உயிரிலே என் உயிரிலே | |
சண்டை | போக்கிரினா விஐய்டா & ஆத்தாடி | |
யாரடி நீ மோகினி | அனைத்துப் பாடல்களும் | |
சந்தோஷ் சுப்பிரமணியம் | அடடா அடடா & உயிரே உயிரே பிரியாதே | |
சாது மிரண்டா | ||
அறை எண் 305ல் கடவுள் | காதல் செய் | |
குருவி | ஹேப்பி நியூ இயர் & குருவி குருவி | |
பாண்டி | உன் கண்கள் | |
தாம் தூம் | ஆழியிலே முட்குளிக்கும் & அன்பே என் அன்பே | |
ஜெயம் கொண்டான் | சுற்றிவரும் பூமி | |
பொய் சொல்லப் போறோம் | அனைத்துப் பாடல்களும் | |
சக்கரக்கட்டி | ஏலே, ஐ மிஸ் யூ & டேக்சி டேக்சி | |
சேவல் | கண்ணம்மா கண்ணம்மா, நம்ம ஊரு நல்லாருக்கு, ஒடமரத்து முள்ளபோல & பார்வையிலே ஒரு ஏக்கம் | |
வாரணம் ஆயிரம் | ஏத்தி ஏத்தி | |
தெனாவட்டு | அனைத்துப் பாடல்களும் | |
மகேஷ், சரண்யா மற்றும் பலர் | காற்றே காற்றே | |
சிலம்பாட்டம் | மச்சான் மச்சான் | |
2009 | சிவா மனசுல சக்தி | அனைத்துப் பாடல்களும் |
தநா-07-அல 4777 | ஐ போன் & கண்ணீரைப் போலே | |
1977 | வங்க கடல் | |
அயன் | ஓ சூப்பர் நோவா, பலபலக்கிற பகலாநீ & விழி மூடி யோசித்தால் | |
மரியாதை | யார் பார்த்தது | |
மாசிலாமணி | நாக்க ரொம்ப நாக்க & ஓடி ஓடி விளையாட | |
முத்திரை | ஓம் சாந்தி ஓம் & ஜுலை மாதத்தில் | |
நாடோடிகள் | யக்கா யக்கா | |
வாமனன் | அனைத்துப் பாடல்களும் | |
ஐந்தாம் படை | 'ஓரம்போ'பாடல் தவிர அனைத்து பாடல்களும் | |
சொல்ல சொல்ல இனிக்கும் | சகியே சகியே & ராஜாத்தி | |
ஆதவன் | டமுக்கு டமுக்கு | |
கண்டேன் காதலை | சுத்துது சுத்துது & ஒரு நாள் இரவில் | |
2010 | ஜக்குபாய் | வா... தினம் தினம் |
அவள் பெயர் தமிழரசி | பாளையங்கோட்டை | |
கச்சேரி ஆரம்பம் | கடவுளே கடவுளே & வித்தை வித்தை | |
அங்காடித் தெரு | அனைத்துப் பாடல்களும் | |
பையா | அனைத்துப் பாடல்களும் | |
சுறா | தஞ்சாவூர் ஜில்லாக்காரி | |
சிங்கம் | என் இதயம் & சிங்கம் சிங்கம் | |
களவாணி | அனைத்துப் பாடல்களும் | |
மதராசபட்டினம் | அனைத்துப் பாடல்களும் | |
தில்லாலங்கடி | பட்டு பட்டு பட்டாம்பூச்சி & சொல் பேச்சு | |
தம்பி அர்ச்சுனா | ஹஜரே ஹஜரே & மழை மேகம் மழை | |
பாணா காத்தாடி | என் நெஞ்சில் & ஒரு பைத்தியம் பிடிக்குது | |
காதல் சொல்ல வந்தேன் | 'ஓ சாலா'பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் | |
நான் மகான் அல்ல | வா வா நிலவு & ஒரு மாலை நேரம் | |
பாஸ் என்கிற பாஸ்கரன் | அனைத்துப் பாடல்களும் | |
இரத்தசரித்திரம் (மறுஉருவாக்கம்) | அனைத்துப் பாடல்களும் | |
அய்யனார் | அனைத்துப் பாடல்களும் | |
2011 | சிறுத்தை | நான் ரொம்ப ரொம்ப & செல்லம் வாடா செல்லம் |
அவர்களும் இவர்களும் | என்ன தவம் செஞ்சுபுட்டேன் | |
வானம் | வானம், வூ யம் ஐ & நோ மணி நோ மணி | |
நர்தகி | அனைத்துப் பாடல்களும் | |
எங்கேயும் காதல் | திமு திமு | |
எத்தன் | ||
சபாஷ் சரியான போட்டி | வந்துட்டான்யா & ஓடு மாமே | |
அவன் இவன் | அனைத்துப் பாடல்களும் | |
தேநீர் விடுதி | "ஒரு மாலை பொழுதில்" | |
தெய்வ திருமகள் | அனைத்துப் பாடல்களும் | |
வெப்பம் | அனைத்துப் பாடல்களும் | |
புலி வேசம் | பாய் பிரண்ட் & வாரேன் வாரேன் | |
வந்தான் வென்றான் | நகருதே நகருதே | |
வெடி | இப்படி மழை | |
ரா ரா | Ethotho Ethotho | |
7ஆம் அறிவு | முன் அந்தி & எல்லேலம்மா | |
போராளி | யார் இவன் & எங்கிருந்து | |
மம்பட்டியான் | மலையூரு. ரீமிக்ஸ் & ஏதோ ஆகுதே | |
மகாராஜா | ||
2012 | விளையாட வா | "வானம் எந்தன்" |
நண்பன் | ஹார்ட்டிலே பேட்டரி & நல்ல நண்பன் | |
வேட்டை | அனைத்துப் பாடல்களும் | |
மெரினா | வணக்கம் சென்னை, காதல் ஒரு தேவதை & மெரினா தீம் | |
அரவான் | 'ஊரே ஊரே என்ன பெத்த' பாடலை தவிர்த்து அனைத்துப் பாடல்களும் | |
கொண்டான் கொடுத்தான் | "தஞ்சாவூரு கோபுரம் அழகு" | |
கழுகு | ஆத்தாடி மனசுதான் | |
உள்ளம் | கண்ணை திறந்து | |
ஒரு கல் ஒரு கண்ணாடி | அனைத்துப் பாடல்களும் | |
வழக்கு எண் 18/9 | அனைத்துப் பாடல்களும் | |
மறுபடியும் ஒரு காதல் | மே மாதம் | |
பில்லா II | அனைத்துப் பாடல்களும் | |
மாற்றான் | ரெட்டை கதிரே | |
துப்பாக்கி | வெண்ணிலவே | |
அம்மாவின் கைபேசி | என்ன செஞ்சு போற & ராஜபாட்டை | |
நீதானே என் பொன் வசந்தம் | அனைத்துப் பாடல்களும் | |
சட்டம் ஒரு இருட்டறை | ஆதாம் ஏவல், திரும்ப திரும்ப & உயிரே உயிரே | |
2013 | சமர் | அனைத்துப் பாடல்களும் |
வத்திக்குச்சி | குரு குரு | |
கேடி பில்லா கில்லாடி ரங்கா | ஒரு பொரம்போக்கு & தெய்வங்கள் எல்லாம் | |
சேட்டை | லைலா லைலா | |
ஆதலால் காதல் செய்வீர் | ஆராரோ பாட இங்கு | |
மூன்று பேர் மூன்று காதல் | அனைத்துப் பாடல்களும் | |
சோக்காலி | ஹே சக்கரகட்டி | |
தில்லுமுல்லு | ஆஜா ஆஜா | |
துள்ளி விளையாடு | வா மச்சி ஊத்துக்கோ & யார் இவளோ | |
பட்டத்து யானை | என்ன ஒரு, பூசணிக் காய் & தலகால் புரியல | |
தலைவா | அனைத்துப் பாடல்களும் | |
தங்க மீன்கள் | அனைத்துப் பாடல்களும் | |
மத்தாப்பு | அனைத்துப் பாடல்களும் | |
வணக்கம் சென்னை | ஓ பெண்ணே & ஹே | |
ஆல் இன் ஆல் அழகு ராஜா | அனைத்துப் பாடல்களும் | |
தலைமுறைகள் | அனைத்துப் பாடல்களும் | |
புதிய திருப்பங்கள் | அனைத்துப் பாடல்களும் | |
2014 | பிரம்மன் | வானத்திலே |
டமால் டுமீல் | ஓடி ஓடி | |
நான் தான் பாலா | உயிரே உனக்காகே, அம்மா ரொம்ப, அறியாம, கண்மணி | |
என்னதான் பேசுவதோ | ||
அதிதி | சொல்ல சொல்ல உள்ளமெங்கும் | |
சைவம் | அனைத்துப் பாடல்களும் | |
அஞ்சான் | ஏக் தோ தீன் சார் பாஞ்ச் | |
பூஜை | அனைத்துப் பாடல்களும் | |
நெருங்கி வா முத்தமிடாதே | அனைத்துப் பாடல்களும் | |
திருடன் போலீஸ் | 'மூடுபனிக்குள்' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் | |
அழகிய பாண்டிபுரம் | கடவுளிடம் | |
2015 | டார்லிங் | 'வந்தா மலை' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும் |
டூரிங் டாக்கீஸ் | ||
காக்கி சட்டை | காக்கி சட்டை | |
நண்பேன்டா | தேனே தேனே செந்தேனே | |
சோன்பப்டி | ஹே சாக்லெட்ஸ் | |
காக்கா முட்டை | ||
நண்பர்கள் நற்பணி மன்றம் | கட்டழகி, பாக்கெட்டில் காசு & உன்னை என்னை | |
பாபநாசம் | அனைத்துப் பாடல்களும் | |
ஆவி குமார் | அனைத்துப் பாடல்களும் | |
இது என்ன மாயம் | அனைத்துப் பாடல்களும் | |
சகலகலா வல்லவன் | புஜிமா புஜிமா & பல்பு வாங்கிட்டேன் | |
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க | ||
திரிஷா இல்லனா நயன்தாரா | முத்தம் கொடுத்த | |
ஈட்டி | உன் சுவாசம் & குய்யோ முய்யோ | |
2016 | சாகசம் | ஏங்ரி பேர்ட், ஓ மது & சாயங்க கு |
அஞ்சல | நக்கலு மாமா & யாரைக் கேட்பது | |
சேதுபதி | அனைத்துப் பாடல்களும் | |
புகழ் | ||
ஒன்பது குழி சம்பத் | பங்காளி, என்னென்ன இதயத்திலே, & ஒப்பாரி | |
கோ 2 | ||
தெறி | என் ஜீவன் | |
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு | ||
அம்மா கணக்கு | ||
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் | மாயா ஓ மாயா | |
மீண்டும் ஒரு காதல் கதை | ||
2017 | யாக்கை | நீ என் கண்கள் |
தரணி | அனைத்துப் பாடல்களும் | |
திட்டிவாசல் | அனைத்துப் பாடல்களும் | |
2018 | 2.0 | புல்லினங்கால் |
யாகன் | ||
2019 | சர்வம் தாளமயம் | மாயா மாயா |
பெட்டிக்கடை | சுடலமாட சாமிக்கிட்ட | |
ஜூலை காற்றில் | மேற்கிலே மேற்கிலே & கண்களின் ஓரமாய் |
படைப்புகள்
[தொகு]இவர் பாட்டெழுதிய சில திரைப்படங்கள்:
- மாற்றான்
- 7ஜி ரெயின்போ காலனி
- நந்தா
- வெயில் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
- புதுப்பேட்டை
- சந்திரமுகி
- சிவாஜி த பாஸ் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
- கற்றது தமிழ்
- கஜினி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
- அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
- தம்பி
- காதல் கொண்டேன்
- காதல்
- மன்மதன்
- சண்டக்கோழி
- தீபாவளி
- போக்கிரி
- பீமா
- வாழ்த்துகள்
- அழகிய தமிழ் மகன்
- சத்தம் போடாதே
- கல்லூரி
- வேல்
- சக்கரக்கட்டி
- சந்தோஷ் சுப்பிரமணியம்
- ஆறு
- வாரணம் ஆயிரம்
- சிவா மனசுல சக்தி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
- அயன் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
- நாடோடிகள்
- வாமனன்
- ஆதவன்
- சுறா
- யாரடி நீ மோகினி
- பையா
- அங்காடித் தெரு
- சிங்கம்
- களவாணி
- மதராசப்பட்டினம்
- நான் மகான் அல்ல
- வானம்
- ரத்த சரித்திரம்
- போராளி
- எத்தன்
- வேட்டை
- எங்கேயும் காதல்
- அவன் இவன்
- பொய் சொல்லப் போறோம்
- நர்த்தகி
- தெய்வத் திருமகள்
- வந்தான் வென்றான்
- நண்பன்
- அரவான்
- மன்னா
- வழக்கு எண் 18/9
- பில்லா 2
- நீதானே எந்தன் பொன்வசந்தம்
- முருகா
நூல்கள்
[தொகு]கவிதைத்தொகுப்புகள்
[தொகு]- நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)[11]
- பட்டாம்பூச்சி விற்பவன்
- ஆணா ஆவண்ணா
- என்னை சந்திக்க கனவில் வராதே
- குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
- தூசிகள்
புதினம்
[தொகு]- சில்க் சிட்டி
கட்டுரைத் தொகுப்புகள்
[தொகு]- கிராமம் நகரம் மாநகரம்[12]
- பால காண்டம்
- வேடிக்கை பார்ப்பவன்
- அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரைத்தொடர்)
விருதுகள்
[தொகு]- 2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது[13]
- 2006: வெயில் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
- 2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
- 2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
- 2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Correspondent, Vikatan. "நான் நா.முத்துக்குமார் ஆனது எப்படி?" (in ta). https://www.vikatan.com/arts/miscellaneous/39443--2.
- ↑ 2.0 2.1 DN (16 ஆகத்து 2016). "என்னுடைய குடும்பத்துக்கு ராயல்டி வழங்கப்படவேண்டும்: நா. முத்துக்குமார் விருப்பம்!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2016.
- ↑ "நா.முத்துக்குமார் பிறந்த நாள் நினைவுகள்: காலத்தால் அறுக்க முடியாத கவிதை உறவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
- ↑ MALATHI RANGARAJAN (February 7, 2013). "Life's a lyric". The Hindu. Chennai. http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece. பார்த்த நாள்: February 08, 2013.
- ↑ புதிய தலைமுறை, 2009-10-29; பக்.51-52
- ↑ புதிய தலைமுறை 2009 10 29 பர். 51
- ↑ "பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்". தினத்தந்தி. 14 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2016.
- ↑ "நா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்!". மாற்று. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 17, 2016.
- ↑ "பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்". Seythigal.com. ஆகத்து 14, 2016. http://www.seythigal.com/?p=11719.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Shocking: Na Muthukumar passes away due to jaundice and high fever". The Times of India. 14 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2016.
- ↑ "பட்டாம்பூச்சி விற்றவன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
- ↑ "இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்". ThanthiTV.com. 2020-07-12. Archived from the original on 2021-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
- ↑ Venkatesan (14 ஆகத்து 2016). "பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிராமம் நகரம் மாநகரம் - நூல் அறிமுகம் பரணிடப்பட்டது 2004-09-03 at the வந்தவழி இயந்திரம்
- நா. முத்துக்குமார் படைப்புகள்