உள்ளடக்கத்துக்குச் செல்

ஆச்சார்யா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆச்சார்யா
இயக்கம்ரவி
தயாரிப்புஎஸ்.என் ராஜா,இ. சித்ரா.,வி.உமாகேஷ்வரி
கதைரவி
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புவிக்னேஷ்
நாசர்
சரண்ராஜ்
ஒளிப்பதிவுஎம்.ராஜவேலு
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2006
மொழிதமிழ்

ஆச்சார்யா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சாமி என்று அழைக்கப்படும் நந்தன் (விக்னேஷ்) அந்தணர் குடும்பத்தைச் சேர்ந்தவன்.இளவயதிலேயே ஒவ்வொரு வீடாகச் சென்று உணவு வாங்கி உண்ணும் பழக்கத்தினைக் கொண்டிருக்கும் அவன் சிறிது காலங்களிலேயே தனது தாயாரையும் இழக்க நேரிட்டது.இச்சமயம் ஓர் இஸ்லாமியரின் அரவணைப்பால் எடுத்து வளர்க்கப்படும் நந்தன் ஒருசமயம் வேறொரு ஊருக்குச் செல்ல நேரிட்டது.அப்பொழுது அங்குவரும் இரு திருடர்களால் நந்தன் கொண்டு சென்றிருந்த பை திருடுப்போகின்றது. அதேசமயம் அத்திருடர்கள் பேருந்து நிலையத்தற்கருகிலேயே நித்திரை கொண்டிருந்த நந்தன் மீது சாராயத்தினையும் ஊற்றிவிட்டுச் சென்றனர் அவர்களைப் பிடிப்பதற்காக ஓடிச் செல்லும் நந்தன் வழியில் காவல்துறையினரைக் கண்டு அத்திருடர்களைப் பற்றிக் கூறுகின்றார்.ஆனால் இவர் மீது சாராய வாடை வரவே அவரை காவல்துறையினர் கைது செய்து செல்கின்றனர்.அங்கு பல துன்புறுத்தலின் பின்னர் காவல் துறை அதிகாரிகள் நடந்த உண்மையினைத் தெரிந்து கொள்கின்றனர்.பின்னர் சிறுது காலம் அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் நந்தன் அங்கிருந்து பெண்ணொருவரின் உதவியை நாடிச் செல்கின்றார்.அப்பகுதிக்கு தலைவிப் பொறுப்பை உடைய அப்பெண்ணும் நந்தன் மீது அன்பு செலுத்துகின்றார்.பின்னர் அங்கு ஏற்படும் கலவரங்களினால் அப்பெண் கொல்லப்படவே கொன்றவர்களைக் பழி தீர்க்கின்றார்கள் நந்தன் மற்றும் அவர் குழுவினர்.இச்செய்தி கேட்டறியும் காவல்துறையின் தலைமைப் பீடத்திலிருந்து வரும் கட்டளையின் படி அங்கு அடாவடித்தனம் செய்யும் அனைவரையும் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவு கிடைக்கின்றது.அதன்படி ஒவ்வொருவரும் சுட்டுக் கொலை செய்யப்படுவதால்,நந்தன் இவற்றைத் தட்டிக் கேட்கின்றார். இவற்றெல்லாவற்றிற்கும் காரணமான தேவரைக் கைது செய்யவும் காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்கின்றார்.அதன்படியே காவல்துறையினரும் செய்கின்றனர் இதற்கிடையில் நந்தன் காதலித்த பெண் தேவரைக் கைது செல்லும் வழியில் தேவரின் காவலாளியால் சுட்டுக் கொள்ளப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சார்யா_(திரைப்படம்)&oldid=3710242" இலிருந்து மீள்விக்கப்பட்டது