வணக்கம் சென்னை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வணக்கம் சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வணக்கம் சென்னை
இயக்குனர் கிருத்திகா உதயநிதி
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்
கதை ஏ. எல். விஜய்
நடிப்பு
இசையமைப்பு அனிருத் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம். நாதன்
படத்தொகுப்பு டி.எஸ். சுரேஸ்
கலையகம் ரெட் ஜியன்ட் மூவிஸ்
வெளியீடு அக்டோபர் 11, 2013 (2013-10-11)
கால நீளம் 136 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg100 மில்லியன் (1.6 மில்லியன் அமெரிக்க டாலர்)
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg980 மில்லியன் (16 மில்லியன் அமெரிக்க டாலர்)

வணக்கம் சென்னை அக்டோபர் 11, 2013இல் வெளியான தமிழ் காமெடி படம் திரைப்படம். இதனைப் புதுமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி எழுதி இயக்க இப் படத்தினை தயாரித்துள்ளார் அவரின் கணவர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்துள்ளார்.


கதை சுருக்கம்[தொகு]

தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையனும், தென்னிந்தியக் கலாசாரத்தை புகைப்படம் எடுக்க வரும் லண்டன் வாழ் இந்தியப் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும் சண்டை ப்ளஸ் காதல் ஸ்பாட் 'வணக்கம் சென்னை’. சென்னைக்கு வரும் சாஃப்ட்வேர் துறை இளைஞன் சிவாவுக்கும், லண்டனில் இருந்து வரும் ப்ரியா ஆனந்துக்கும் ஒரே ஃப்ளாட்டை ஏமாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார் போலி ஹவுஸ் ஓனர் சந்தானம். ப்ரியா ஆனந்த், ஏற்கனவே லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். மோதல் கடைசியில் காதலாக எட்டிப்பார்க்க, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருத்திகா உதயநிதி.[1]

நடிகர்கள்[தொகு]


இசை[தொகு]

இப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்துள்ளார்.ஆல்பம் சூர்யன் எஃப்எம் மற்றும் ஐடியூன்ஸ், இந்தியா இல் 27 ஜூலை 2013 அன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டு சில நாட்களுக்குள் ஆல்பம் ஐடியூன்ஸ், இந்தியா பிரிவில் முதலிடத்தை அடைந்தது.

வணக்கம் சென்னை
ஒலிப்பதிவு :அனிருத் ரவிச்சந்திரன்
வெளியீடு 27 ஜூலை 2013
ஒலிப்பதிவு 2013
இசைப் பாணி திரைப்பட ஒலிப்பதிவு
மொழி தமிழ்
இசைத்தட்டு நிறுவனம் சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்
அனிருத் ரவிச்சந்திரன் காலக்கோடு
எதிர்நீச்சல்
(2013)
வணக்கம் சென்னை
(2013)
மான் கராத்தே
(2013)
எண் தலைப்பு பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1. "ஏய்!"   நா. முத்துக்குமார் அங்கராக் மஹந்தா,மரியா ரோய் வின்சென்ட் 04:34
2. "ஒசாக ஒசாக"   மதன் கார்க்கி அனிருத் ரவிச்சந்திரன்,பிரகதி குருபிரசாத் 06:09
3. "ஓ பெண்ணே"   நா. முத்துக்குமார் விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்திரன்,அர்ஜுன் 04:35
4. "சென்னை சிட்டி காங்க்ஸ்டா"   கிப்கொப் தமிழா அனிருத் ரவிச்சந்திரன்,ஹார்ட் கவுர், கிப்கொப் தமிழா, நாட்டுக் கோழி 04:17
5. "எங்கடி பொறந்த"   விக்னேஷ் சிவன் அனிருத் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா ஜெரெமையா 03:23
6. "ஐலச ஐலச"   மதன் கார்க்கி அனிருத் ரவிச்சந்திரன், சுசித்ரா 04:04
7. "ஓ பெண்ணே (சர்வதேச)"   அர்ஜுன் அர்ஜுன், அனிருத் ரவிச்சந்திரன், சார்லஸ் போஸ்கோ, நயீம் 03:29
மொத்த நீளம்:
30:31

வரவேற்பு[தொகு]

இத்திரைப்படத்திற்கு சினிமா விகடன் இதழில் 41/100 மதிப்பெண்கள் கிடைத்தது.[2] "பார்த்த கதை, யூகிக்க முடிந்த காட்சிகள்தான். ஆனால், கலகலப்புக்காக, சின்ன வணக்கம் வைக்கலாம்!" என சினிமா விகடன் விமர்சனக்குழு தெரிவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=72030
  2. வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்