சட்டம் ஒரு இருட்டறை (2012 திரைப்படம்)
சட்டம் ஒரு இருட்டறை | |
---|---|
இயக்கம் | சினேகா பிரிட்டோ |
தயாரிப்பு | விமலா ராணி |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | தமன் குமார் பிந்து மாதவி பியா பஜ்பை ரீமா சென் |
ஒளிப்பதிவு | சி. ஜே. ராஜ்குமார் |
படத்தொகுப்பு | எம். ஆர். ரிஜேஷ் |
கலையகம் | எஸ்தெல் எண்டர்பிரைசஸ் |
வெளியீடு | 21 திசம்பர் 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 5 மில்லியன் |
சட்டம் ஒரு இருட்டறை (Sattam Oru Iruttarai) 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்கம் சினேகா பிரிட்டோ, இப்படம் 1981இல் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 'சட்டம் ஒரு இருட்டறை என்ற இதே பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும். இப்படத்தில் தமன் குமார், பிந்து மாதவி ரீமா சென் , பியா பஜ்பை மற்றும் பலரும் நடித்திருந்தனர். 2017 இல் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "லவ்வர்ஸ் கோ பெட்டுக்கோவடு" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]தமன் குமார் - விஜய்
பிந்து மாதவி - தியா
பியா பஜ்பை - ஜெஸ்மைன் / ஜெஸ்
ரீமா சென் - கௌசல்யா ராமன்
சுரேஷ்
ராதாரவி
சம்பத் ராம் - ஆன்ந்த்
பேபி ரக்ஷ்னா
கிருஷ்ணமூர்தி
எஸ். ஏ. சந்திரசேகர் (சிறப்புத் தோற்றம்)
தயாரிப்பு
[தொகு]2012 பிப்ரவரியில், விஜய் அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1981இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தை திரும்பவும் படமாக்கப் போவதாகத் தெரிவித்தார். நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[1] கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'கோ திரைப்படத்தில் நடித்த கார்த்திகா நாயர் மற்றும் பியா பஜ்பை, ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் புது வரவான சினேகா இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] மீனா நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சி.ஜே. ராஜ்குமார் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முறையே இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டனர்.[3] 2012 இல் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விக்ரம் பிரபு, தனது முந்தைய படமான கும்கி படத்தின் இறுதிக் காட்சி படமாகுவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். அக்டோபர் 2012 இல் ஒரு புதிய நடிகரைக் கண்டறிய் வேண்டியிருந்தது.[4] சந்திரசேகர் விக்ரம் பிரபுவிற்கு மாற்றாக நடிகர் ஆதி, அருண் விஜய் அல்லது விஷ்ணு ஆகியோரை தேர்ந்தெடுக்க யோசனைக் கூறினார்.[5] 2012 ஜூன் வாக்கில் விக்ரம் பிரபு மற்றும் கார்த்திகா நாயர் இருவரும் இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகினர். பின்னர் புது வரவான நடிகர் அர்ஜுனும் ,2009இல் வெளிவந்த குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் என்ற படத்தில் நடித்திருந்த நடிகை தனன்யாவும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.[6] கடைசியாக நடிகர் தமன் குமார் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்து இப்படம் வெளி வந்தது.[7][8]
2012 ஜூலைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் போது " தோழன் " என்று பெயரிடப்பட்டது. மேலும் நடிகர் ராதாரவி மற்றும் சுரேஷ் ஆகியோரும் இப்படத்தில் இணைந்தனர்.t.[9][10] 2012 டிசம்பரில் மீண்டும் இப்படத்திற்கு "சட்டம் ஒரு இருட்டறை" என்ற பெயரே வைக்கப்பட்டது.[11]
ஒலித்தொகுப்பு
[தொகு]படத்தின் இசை இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி
உயிரே உயிரே - தீபக் , வந்தனா
நிமிர்ந்து நில் - சந்தோஷ் , அஜீஸ்
ஆதாம் ஏவாள் - நரேஷ் ஐய்யர், ஹரிணி
பூச்சாண்டி பார்வையில் - விஜய் ஆன்டனி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி
திரும்ப திரும்ப - ஹரிசரண், ஆண்ட்ரியா ஜெரெமையா
விமர்சனம்
[தொகு]பிகைன் வுட்: 2012இல் வெளியான "சட்டம் ஒரு இருட்டறை" படம் ஏற்கனவே வெளியான படத்தின் சாரத்தை கொண்டுள்ளது என எழுதியது..[12] தமன் குமார் நம்பிக்கையின் அறிகுறிகளைக் காட்டினார், ஆனால் திருப்திகரமான செயல்திறனை வழங்குவதற்காக ஒட்டுமொத்தமாக போராடினார் என சி.என்.என்-ஐ.பி.எம் எழுதியது.[13]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Vijay to produce Vikram Prabhu's film? - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-02-29. Archived from the original on 2013-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ V Lakshmi (2012-03-21). "Karthika, Piaa back together - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Vijay's first production casting Reema Sen begins - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Vijay And Vikram's Film In Trouble? - Vijay - Vikram - Tamil Movie News". Behindwoods.com. 2012-06-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ Anupama Subramanian DC chennai (2012-06-05). "Newcomer to replace Vikram Prabhu". Deccan Chronicle. Archived from the original on 2012-06-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ Team CT, TNN (2012-06-15). "SAC signs on Arjun, Thananya - Times Of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ Srinidhi Rajagopal DC chennai (2012-06-17). "'Give talent a chance'". Deccan Chronicle. Archived from the original on 2012-06-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ "Reema resumes shoot for 'Sattam Oru Iruttarai'". Sify.com. 2012-07-03. Archived from the original on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Oor Kaalan. "Sattam oru Iruttarai remake titled 'Thozhan' | Tamil Cinema News, Latest Movie Kollywood Gossips, Reviews". Kollyinsider.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ "Vijay movie title changed to Thozhan - Cine Buzzz Tamil Cinema News". Cinebuzzz.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/88943.html
- ↑ http://behindwoods.com/tamil-movies/sattam-oru-iruttarai/sattam-oru-iruttarai-review.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-01.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)