விஜய் ஆண்டனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜய் அண்டனி
இசை வடிவங்கள் திரையிசை, இசையமைப்பாளர்
தொழில்(கள்) இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில் 2005 – இன்றுவரை
இணையத்தளம் vijayantony.com

விஜய் ஆண்டனி இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[1] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.

இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன்.

மேலும் இவர் கன்னடப் படம் பூதிவந்தா விற்கு இசையமைத்துள்ளார்;இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு.

2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காக பெற்றார்.

தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.

மேலும் 2016 ம் ஆண்டு வெளியாகியிருக்கும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்

திரைப்படங்கள்/தொகுப்புகள்[தொகு]

ஆண்டு பெயர் மொழி குறிப்புகள்
2005 சுக்ரன் தமிழ்
2006 பை2 தமிழ்
டிஷ்யூம் தமிழ்
2007 நினைத்தாலே தமிழ்
நான் அவனில்லை தமிழ்
2008 பந்தயம் தமிழ்
காதலில் விழுந்தேன் தமிழ் | ]]
பூதிவந்தா கன்னடம் நான் அவனில்லை மறுபதிப்பு
பசும்பொன்தேவர் வரலாறு தமிழ்
2009 அ ஆ இ ஈ தமிழ்
தநா-07 அல் 4777 தமிழ்
மரியாதை தமிழ்
நினைத்தாலே இனிக்கும் தமிழ்
மகாத்மா தெலுங்கு
வேட்டைக்காரன் தமிழ்
2010 ரசிக்கும் சீமானே தமிழ்
உத்தம புத்திரன் தமிழ் எடுக்கப்படுகிறது
கனகவேல் காக்க தமிழ் ஒலிப்பேழை வெளியிடப்பட்டுள்ளது
அங்காடித்தெரு தமிழ்
அவள் பெயர் தமிழரசி தமிழ்

|naan||tamil


மேற்கோள்கள்[தொகு]

  1. Kalpagam Sarma. "'Naaka Mukka' Antony". goergo.in. பார்த்த நாள் 2009-01-19.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_ஆண்டனி&oldid=2082379" இருந்து மீள்விக்கப்பட்டது