வேட்டைக்காரன் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேட்டைக்காரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வேட்டைக்காரன்
இயக்கம்பாபு சிவன்
இசைவிஜய் அன்டனி
நடிப்புவிஜய்
கலையகம்ஏவிஎம் நிறுவனம்
வெளியீடு2009
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்42 கோடி

வேட்டைக்காரன் சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் "விஜய்",அனுஷ்கா,மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 18 2009 அன்று வந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

கதை[தொகு]

தூத்துக்குடியை சேர்ந்தவர் ரவி (விஜய்). ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் அங்கு நியாயம் கேட்க ரவி சென்று விடுவான். அதனால் ஊரில் ரவியின் பெயர் 'போலீஸ் ரவி' என்று ஊர் மக்கள் சூட்டினர். ரவியின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம், சென்னையில் வசிக்கும் தேவராஜ் (ஸ்ரீ ஹரி) போன்று ஒரு பெரிய போலீஸ் ஆபிசர் ஆக வேண்டும் என்பது தான். 12 முடித்த பின்பு 'போலீஸ் ரவி' சென்னையில் ஒரு கல்லூரியில் சேருகிறான். சென்னையில் சுசீலா (அனுஷ்கா ஷெட்டி) என்னும் பென்னை பார்த்தவுடன் காதலில் விழுகிறான். சுசீலாவின் பாட்டியின் உதவியுடன் சுசீலாவும் ரவியை காதலிக்கிறாள். ரவி படிக்கும் கல்லூரியில் உமாவும் படிக்கிறாள். ரவியும் உமவும் நன்பர்களாக பழகுகின்றனர்.

சென்னையில் செல்லா எனும் ஒரு ரவுடி, தான் ஆசை கொள்ளும் அனைத்து பெண்களையும் அடைய வேண்டும் எனும் என்னம் கொண்டவன். செல்லா உமாவை ஒரு நாள் பார்த்துவிட்டு, உமாவை அனுப்புமாறு உமாவின் தந்தையை மிரட்டுவான். இதை அறிந்த ரவி செல்லாவையும் அவன் ஆட்களையும் அடித்து துவம்சம் செய்து விடுவான். செல்லாவின் தந்தை வேதனாயகம் (சலிம் கோஸ்) தன் கையில் உள்ள ஒரு காவல் அதிகாரி 'கட்டபொம்மன்' (ஷியாஜி ஷிண்டே) மூலம் ரவியை போலி என்கௌன்டெர் (encouonter) மூலம் 'பாம் செல்வம்' என்பவனுக்கு பதிலாக கொள்வதர்க்கு ஏற்பாடுகள் செய்வான். அதில் இருந்து ரவி தப்பித்து விடுவான். ரவி, தேவராஜ் வசிக்கும் வீட்டிற்கு சென்ற பின்பு, வேதனாயகம் தேவராஜின் குடும்பத்தை அழித்துவிட்டு அவரையும் குருடணாக்கி விட்டான் என்று.

ரவி எங்கு செல்வது என தெரியாமல் வேதனாயகமிடம் செல்லும் பொழுது, வேதனாயகம் நீ என் அடிமையாக இருக்க வேண்டும் என்று கூறி அவன் வாழ்க்கை வர்லாற்றை ரவியிடம் கூறுவான். பின்பு ரவியும் அவன் நன்பர்களும் சேர்ந்து வேதனாயகத்தையும் அவன் கூட்டாலிகளையும் எதிர்த்து போராடுவார்கள். இப்போராட்டத்தில் இருவ்ர் பக்கத்திலும் உயிர் இழப்புகள் ஏற்படும். கடைசியில் யார் ஜெய்கிறார்கள், ரவி போலீஸ் ஆகிறான இல்லையா என்பது தான் மீதி கதை.

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் (நீ:நொ) பாடலாசிரியர் படம்பிடித்த இடம்
1 "நான் அடிச்சா" சங்கர் மகாதேவன் 4:37 கபிலன் ராஜ் முந்திர்
2 "கரிகாலன்" சுசீத் சுரேசன், சங்கீதா ராஜேஷ்வரன் 4:17 கபிலன் பொள்ளாச்சி
3 "புலி உறுமுது" ஆனந்த், மகேஷ் விநாயகம் 4:17 கபிலன் ஏவிஎம் ஸ்டுடியோ மற்றும் மதுரை
4 ஒரு சின்னத் தாமரை" கிரிஷ், தினேஷ் கணகரத்னம், பொனிகில்லா, சுசித்ரா 4:35 விவேக் புனே
5 "என் உச்சிமண்டைல" கிருஷ்ணா ஐயர், சோபா சந்திரசேகர், சாருலதா மணி, சக்திஸ்ரீ கோபாலன் 4:12 அண்ணாமலை ஏவிஎம் ஸ்டுடியோ

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2009- Kollywood Hits & Misses!". Sify. பார்த்த நாள் 18 February 2012.
  2. "Vijay-Anushka: Puli Veta releasing in 1st week of March". Ragalahari.com (22 February 2011). பார்த்த நாள் 14 September 2011.