நிவாஸ் கே. பிரசன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிவாஸ் கே. பிரசன்னா (Nivas K. Prasanna) என்பவர் ஒரு இந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் முதன் முதலில் சி. வி. குமாரின் திரைப்படமான, தெகிடி (2014), வெற்றிப் படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.[1]

வாழ்க்கை[தொகு]

இவர் பிறந்து வளர்ந்தது தமிழகத்தின் திருநெல்வேலியில். இவர் தன் பத்து வயதில் கருநாடக இசையைக் கற்கத் துவங்கினார். மேலும் பியானோ இசை வாசிப்பையும் கற்றுக்கொண்டார். படித்தது மகதலேனா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில். பின்னர் இவரது குடும்பத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தனர். விசுவல் கம்யூனிகேசன் படிப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் முடித்து, திரைத்துறையில் தீவிரமாக வாய்ப்புகள் தேடத்துவங்கினார்.[2] அப்போது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தார். வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவிடம் வாய்ப்பு கேட்டார். நிவாசின் பியானோ வாசிக்கும் திறன் ராஜேஷ் வைத்யாவைக் கவர, மேடைக் கச்சேரிகளில் அவரோடு இணைந்து வாசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பாரதியார் பாடல்களுக்கு நிவாஸ் நவீனமாக இசையமைக்க, சைந்தவி குரலில் ‘கண்ணம்மா’ என்ற ஆல்பம் வெளியாகித் திரை வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்தது. ‘வில்லா’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு வந்து பின் கை நழுவியது. ‘தெகிடி’ படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ‘விண்மீன் விதையில்’ பாடல் மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் புகழ் சத்தியப் பிரகாஷ் குரலில் ‘யார் எழுதியதோ’, ஷங்கர் மகாதேவன் பாடிய ‘நீதானே’ இப்படிப் பல மெல்லிசைகள் அணிவகுத்து, புகழ் பெற்றுத் தந்தது. இந்திய இசை வெளியீட்டு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘திங் மியூசிக்’ தெகிடி பாடல்களை வெளியிட்டது.

திரையிசைகள்[தொகு]

வெளிவந்த பின்னணி இசைகள்[தொகு]

ஆண்டு
தமிழ்
தெலுங்கு குறிப்பு
2014 தெகிடி பாத்ரம்

சிறந்த
இசையமைப்பாளருக்கான
எடிசன் விருது

2016 சேதுபதி
2016 சீரோ

வரவிருப்பவை[தொகு]

ஆண்டு
படம்
குறிப்பு
2016 கூட்டத்தில் ஒருத்தன் தயாரிப்பில்

பின்னணி பாடகராக[தொகு]

ஆண்டு
படம் பாடல் குறிப்பு
2016 சேதுபதி "மழைத்

தூறலாம்"

2016 சீரோ

"இந்தக்

காதல் இல்லையேல்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவாஸ்_கே._பிரசன்னா&oldid=3385930" இருந்து மீள்விக்கப்பட்டது