உள்ளடக்கத்துக்குச் செல்

காதலில் விழுந்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதலில் விழுந்தேன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பி. வி. பிரசாத்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புநகுல்
சுனைனா
லிவிங்ஸ்டன்
சம்பத் ராஜ்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
விநியோகம்சன் படங்கள்
வெளியீடு26 செப்டம்பர் 2008 (2008-09-26)
ஓட்டம்188 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதலில் விழுந்தேன் (Kadhalil Vizhunthen) 2008ல் பி.வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதில் நகுல், சுனைனா ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்கா என்ற அறியப்பெற்ற கானாப் பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "டோலே"  பிரியன்ரெலினா, மேகா (பாடகர்) 4:17
2. "நாக்க முக்கா" (ஆண்)பி. வி. பிரசாத்விஜய் ஆண்டனி 4:56
3. "சொல்லடி"  தாமரைதிப்பு 5:08
4. "தோழியா"  பி. வி. பிரசாத்விஜய் ஆண்டனி, ஹரிஷ் ராகவேந்திரா, சிறீ சரன் 4:47
5. "என்ன சொன்னேன்"  பி. வி. பிரசாத்நிதிஷ் கோபாலன் 1:09
6. "உன் தலை முடி"  நெப்போலியன்கார்த்திக், நிதிஷ் கோபாலன், மாயா 5:27
7. "நாக்க முக்கா" (பெண்)பி. வி. பிரசாத்நகுல், சின்னப்பொண்ணு 3:17
8. "உன்னக்கென நான்"  தாமரைவிஜய் ஆண்டனி, ரம்யா என்.எஸ்.கே. 3:44
9. "கடவுள் படைத்த"  பி. வி. பிரசாத்விஜய் ஆண்டனி, பாத்திமா 6:16
மொத்த நீளம்:
39:01

தயாரிப்பு

[தொகு]

இப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் நகுல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் மிகுந்த எடையுடன் குண்டாக காணப்பட்டார். அப்படத்திற்கு பின்னர் இராணுவத்தில் சேருவதற்காக நிறைய உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இப்படத்தின் இயக்குநர் நகுலைக் கண்டார். இன்னும் பத்து கிலோ எடை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இயக்குநர், நகுலை இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.[1]

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "அழுத்தம் இல்லாத காதலும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையுமாக முன் பாதியில் விழுகிற கதை, கடைசி வரைக்கும் எழுந்து நிற்கப் போராடுகிறது!" என்று எழுதி 38/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. மா.பாண்டியராஜன் (2018-09-26). "``ஆர்மில சேர உடம்பைக் குறைச்சேன்; ஆனா, காதலில் விழுந்துட்டேன்!" - நகுல் #10YearsOfKadhalilVizhunthen". விகடன். Retrieved 2025-06-01.
  2. "சினிமா விமர்சனம்: காதலில் விழுந்தேன்". விகடன். 2008-10-15. Retrieved 2025-06-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலில்_விழுந்தேன்&oldid=4284726" இலிருந்து மீள்விக்கப்பட்டது