கார்த்திகா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்த்திகா நாயர்
Karthika -makaramanju actress.jpg
பிறப்பு27 சூன் 1992 (1992-06-27) (அகவை 30)
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2009 – இன்றளவும்
பெற்றோர்ராதா
உறவினர்கள்துளசி நாயர் (சகோதரி)

கார்த்திகா நாயர் (Karthika nair) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரியும் (துளசி நாயர்) உள்ளனர். இவரும் ஒரு நடிகையாவார். இவர் தனது பள்ளிப் பருவத்தை மும்பையில் உள்ள போடர் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தார். இவர் தற்பொழுது லண்டன் பொருளாதார கல்லூரியில் (London School of Economics) தொழில் கல்வி படித்து கொண்டிருக்கிறார்.

தொழில்[தொகு]

இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

இவர் தற்பொழுது வா டீல், கோல்ட் மற்றும் புறம்போக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புகள்
2009 ஜோஷ் வித்யா தெலுங்கு
2011 மகரமஞ்சு சுகந்த பை,
ஊர்வசி
மலையாளம்
2011 கோ ரேணுகா நாராயணன் தமிழ்
2012 தம்மு நீலவேணி தெலுங்கு
2013 கம்மத் & கம்மத் சுரேகா மலையாளம்
2013 அன்னக்கொடி அன்னக்கொடி தமிழ்
2013 பிருந்தாவன பூமி கன்னடம்
2013 டீல் தமிழ் படப்பிடிப்பில்
2013 கோல்ட் மலையாளம் முன் தயாரிப்பு
2013 புறம்போக்கு தமிழ் முன் தயாரிப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகா_நாயர்&oldid=2923979" இருந்து மீள்விக்கப்பட்டது