உள்ளடக்கத்துக்குச் செல்

துளசி நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசி நாயர்
பிறப்பு25 அக்டோபர் 1997 (1997-10-25) (அகவை 26)
பணிநடிகை, விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013 – இன்று வரை
பெற்றோர்ராதா நாயர்
உறவினர்கள்கார்த்திகா நாயர் (சகோதரி)

துளசி நாயர் (பிறப்பு: 25 அக்டோபர் 1997) இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் பிரபல நடிகை ராதாவின் மகள் ஆவார். 2013ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ரவி கே. சந்திரன் இயக்கிய யான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

துளசி 25 அக்டோபர் 1997ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல நடிகை ராதா மற்றும் தொழில் அதிபர் ராஜசேகரன் நாயரின் இளைய மகள் ஆவார். இவருக்கு கார்த்திகா நாயர் என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு, இவரும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் உண்டு.

திரை வாழ்க்கை[தொகு]

இவர் தனது 14ஆவது வயதில் இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன், அரவிந்த் சாமி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை), 3ஆவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது: சிறந்த அறிமுக நடிகை போன்ற விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.

2014ஆம் ஆண்டு ரவி கே. சந்திரன் இயக்கிய யான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜீவா நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2013 கடல் ஸ்ரீலா தமிழ் பரிந்துரை—விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
பரிந்துரை—3வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது: சிறந்த அறிமுக நடிகை
2014 யான் பீட்ரைஸ் தமிழ்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_நாயர்&oldid=2214010" இலிருந்து மீள்விக்கப்பட்டது