டார்லிங் (திரைப்படம்)
| டார்லிங் | |
|---|---|
| இயக்கம் | சாம் ஆண்டன் |
| தயாரிப்பு | அல்லு அரவிந்த் கே. இ. ஞானவேல் ராஜா |
| கதை | மாருதி தாசரி சாம் ஆண்டன் |
| இசை | ஜி. வி. பிரகாஷ்குமார் |
| நடிப்பு | ஜி. வி. பிரகாஷ்குமார் நிக்கி கல்ரானி கருணாஸ் பாலா சரவணன் |
| ஒளிப்பதிவு | கிருஷ்ணன் வசந்த் |
| படத்தொகுப்பு | ரூபன் |
| கலையகம் | கீதா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ கிரீன் |
| விநியோகம் | டிரீம் பேக்டரி |
| வெளியீடு | 15 சனவரி 2015 |
| ஓட்டம் | 126 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹10 கோடி (ஐஅ$1.2 மில்லியன்) |
| மொத்த வருவாய் | ₹32 கோடி (ஐஅ$3.7 மில்லியன்) |
டார்லிங் என்பது 2015ஆம் ஆண்டில் அறிமுக இயக்குநரான சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திகில் நகைச்சுவைத் திரைப்படமான இத்திரைப்படத்தினை அல்லு அரவிந்த்,[1] கே. இ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஜி. வி. பிரகாஷ்குமார், நிக்கி கல்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2013 ஆவது ஆண்டில் தெலுங்கில் வெளியான பிரேம கதை சித்திரம் திரைப்படத்தின் மறுவாக்கமாகும். 2015 சனவரி 15 அன்று வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை நா. முத்துக்குமார் மற்றும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளனர். இந்த ஆல்பம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று சூரியன் எஃப்.எம் சுடுடியோவில் வெளியிடப்பட்டது.[2]