ஹலோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹலோ (Hello) கே. செல்வ பாரதி இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த், ப்ரீத்தி, சுஜிதா, ரஞ்சித் மற்றும் பலர் நடித்துள்ளனர். திருவேங்கடம் தயாரிப்பில், தேவா இசை அமைப்பில், 7 நவம்பர் 1999 ஆம் தேதி வெளியான இப்படம், பாக்ஸ் ஆபீசில் சராசரி வெற்றியைப் பெற்றது.[1]

நடிகர்கள்[தொகு]

பிரசாந்த், ப்ரீத்தி, சுஜிதா, ரஞ்சித், மணிவண்ணன், சார்லீ, வையாபுரி, சுரேஷ், செந்தில், இளவரசி, ஆர். சுந்தர்ராஜன், காக்கா ராதாகிருஷ்ணன், கனல் கண்ணன்.

கதைச்சுருக்கம்[தொகு]

சந்துரு (பிரசாந்த்) பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். பெண்களை தன் வசப்படுத்த அவன் பல முறை முயன்றிருந்தாலும் அவனுக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. அதனால், அவனது நண்பர்கள் (சார்லீ, வையாபுரி (நடிகர்)) மிகவும் கேலி செய்தனர். அதிலிருந்து தப்பிக்க, கோவிலில் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை (ப்ரீத்தி) காட்டி அவள் தான் தன் காதலி என்று கூறிவிடுகிறேன் சந்துரு. அடிக்கடி அந்த பெண்ணிடம் தொலைபேசியில் பேசுவது போல் சந்துரு நாடகமாட, அவனது நண்பர்களும் அதை நம்பிவிடுகின்றனர்.

இந்நிலையில், சார்லியின் நண்பன் சுரேஷ் பெண் பார்க்க சென்னை வருகிறான். அந்த பெண் - ஸ்வேதா, சந்துரு விரும்பும் பெண் என்று தெரியவர, திருமணத்தை நிராகரிக்கிறேன் சுரேஷ். அதனால், ஸ்வேதாவின் அண்ணன் சேகர் (ரஞ்சித்) அவளை நம்பாமல் மிகவும் திட்டிவிட, அதை தாங்கிக் கொள்ள இயலாமல், தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள் ஸ்வேதா.

பின்னர், ஸ்வேதாவிடம் தான் யார் என்று உண்மையை மறைத்து அறிமுகமாகி, நன்மதிப்பைப் பெற்று, சந்துருவும் ஸ்வேதாவும் விரும்பினர். பின்னர், சந்துரு யார் என்று தெரியவர, சந்துரு-ஸ்வேதா திருமணம் தடைபடுகிறது. இறுதியில், அந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடந்ததா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் தேவா ஆவார். வைரமுத்து எழுதிய ஆறு பாடல்களும் 1999 ஆம் ஆண்டு வெளியானது.

பாடல்களின் பட்டியல்[2][தொகு]

  1. ஸலாம் குலாமு
  2. செல்ல செல்ல
  3. பி.பி.சி. போல
  4. வேலன்டைன்ஸ்
  5. இந்த நிமிஷம்
  6. ஸ்லாம் குலாமு II

தயாரிப்பு[தொகு]

ஹலோ, கே. செல்வ பாரதியின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படமாகும். இது, ப்ரீத்தியின் முதல் தமிழ் படமாகும். அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தால், படப்பிடிப்பின் பொழுது அவர் வசங்களை ஹிந்தி மொழியில் பேச, பின்னர் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டது. ஹலோ படத்தின் தயாரிப்பு மிகவும் விரைவாக நடந்து முடிந்ததாக நடிகை ப்ரீத்தி குறிப்பிட்டிருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.thiraipadam.com".
  2. "https://itunes.apple.com".
  3. "http://www.rediff.com".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_(திரைப்படம்)&oldid=2701284" இருந்து மீள்விக்கப்பட்டது