உள்ளடக்கத்துக்குச் செல்

நவீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன். எம்
இருப்பிடம்தமிழ்நாடு, சென்னை
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
சிந்து

நவீன் (Naveen) என்பவர் இந்திய திரை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்பட துறையில் இயங்கிவருகிறார். 2013 இல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக இவர் அறிமுகமானார். இப்படத்தை இவரது தயாரிப்பு நிறுவனமான ஒயிட் ஷாடோஸ் புரொடக்சன்ஸ் நிறுவம் தயாரித்தது.[1][2]

முன்வாழ்கை

[தொகு]

நவீன் ஈரோடு அருகே உள்ள கவுந்தப்பாடியில் பிறந்தவர். ஒரு பொறியாளராக தனது பணியைத் தொடங்கிய இவர், ஈ.ஐ.டி பாரி மற்றும் கிளாக்கோ ஸ்மித்க்லைன் நிறுவனத்தில் தில்லியில் பணிபுரிந்தார். திரைப்படத்தில் உள்ள ஆர்வத்தினால் இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் பணியாற்றினார். அந்த அனுபவத்தில் இயக்குநர் பாண்டிராஜிடம் தேசிய விருதுபெற்ற படமான பசங்க படத்தில் பணியாற்றினார்.

தொழில்

[தொகு]

நவீன் தனது திரைப்பட வாழ்க்கையை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளராக தனது முதல் படமான மூடர் கூடம் மூலம் தொடங்கினார். இவர் தனது மூடர் கூடம் திரைக்கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி, நிறையப் பேர் ஏற்காத நிலையிலும் நிறைய மாற்றங்களைப் பரிந்துரைத்தனர். இதனால் தானே தயாரிக்க முடிவுசெய்து தனது ஒயிட் ஷாடோஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தால், படத்தைத் தயாரித்தார். இப்படமானது இயக்குனர் பண்டிராஜின் (பசங்க திரைப்பட புகழ்) நிறுவனத்தின் மூலமாக விநியோகிக்கப்பட்டது. மூடர் கூடமானது விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றது. இந்தப்படத்தில் இவரது திரைக்கதை, இயக்கம், உரையாடல் போன்றவற்றிற்காக பாராட்டப்பட்டார். 8 வது ஆண்டு விஜய் டிவி விருதுகளில் சிறந்த உரையாடலுக்கான விருதை இப்படத்துக்காக நவீன் வென்றார். நவீன் தற்போது கொளஞ்சி என்ற படத்தை தயாரித்துவருகிறார். கொளஞ்சி படமானது பல நடிகர்கள் நடிக்கும் படமாக உள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சங்கவி ஆகியோர் நடிக்கின்றனர்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் இயக்குநர் தயாரிப்பு எழுத்து நடிகர் குறிப்பு
2013 மூடர் கூடம் ஆம் ஆம் ஆம் ஆம் 8 வது ஆண்டு விஜய் டிவி விருதுகளில் சிறந்த உரையாடலுக்கான விருது
TBA அக்னி சிறகுகள் ஆம் இல்லை ஆம் இல்லை தயாரிப்பில்
TBA கொளஞ்சி இல்லை ஆம் ஆம் இல்லை தயாரிப்புக்குப் பிந்தைய பணியில்
TBA அலாவுதீனின் அற்புத கேமரா ஆம் ஆம் ஆம் ஆம் [3]

விருதுகள்

[தொகு]

போட்டியில்

[தொகு]
  • சிறந்த இயக்குநர் – 8வது தொலைக்காட்சி விருதுகள்
  • சிறந்த திரைக்கதை 8வது ஸ்டார் விஜய் விருதுகள்
  • சிறந்த அறிமுக நடிகர் – 3வது சிக்மா விருதுகள்
  • சிறந்த இயக்குநர்- டெலிவிசன் மிர்ச்சி 'பசங்க' விருதுகள்.
  • சிறந்த அறிமுக இயக்குநர் - 2013 பிகைண்ட் உட்ஸ் கோல்ட் விருதுகள்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன்&oldid=3954264" இலிருந்து மீள்விக்கப்பட்டது