தேவதையை கண்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவதையை கண்டேன்
வகை
திரைக்கதைபாண்டியன்
இயக்கம்ரத்னம் வாசுதேவன் (1-381)
அப்துல்லா (382-593)
படைப்பு இயக்குனர்அப்துல்லா
நடிப்பு
  • ஈஸ்வர்
  • கிருத்திகா லட்டு
  • மகாலட்சுமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்593
தயாரிப்பு
ஒளிப்பதிவுகுணசேகரன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்9 அக்டோபர் 2017 (2017-10-09) –
21 பெப்ரவரி 2020 (2020-02-21)
வெளியிணைப்புகள்
இணையதளம்

தேவதையை கண்டேன் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் பிப்ரவரி 21, 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை பகல் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகி, 593 ஆத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரில் ஸ்ரீ குமார், ஈஸ்வர் ரகுநாதன், ஷாமிலி நாயர், கிருத்திகா லட்டு, மகாலட்சுமி, சுலக்சனா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடரின் ஆரம்ப கதை ஜீ தெலுங்கு தொடரான 'ராம சீதெக்கடா' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது இயக்குனர் ரத்னம் வாசுதேவன் இயக்கியுள்ளார். அதன் பிறகு அத்தியாயம் 382 முதல் 593 வரை இயக்குனர் அப்துல்லா என்பவர் இயக்கியுள்ளார்.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • ஸ்ரீ குமார்(பகுதி:1-225) → ஈஸ்வர் ரகுநாதன் (பகுதி: 226-593) - வாசுதேவன்
  • ஷாமிலி நாயர் (பகுதி:1-373) → கிருத்திகா லட்டு[3] (பகுதி: 374-593) - லட்சுமி / ஜானகி / நல்லம்மா
  • மகாலட்சுமி - பவித்ரா

துணைக் கதாபாத்திரம்[தொகு]

  • ஷீலா → சுலக்சனா - மீனாட்சி
  • ரிஷி - கேசவ்
  • மானஸ் - ரகுராம்
  • ரவிவர்மா -
  • ரவி - வேலு
  • சரண்யா - காவியா
  • ஜெயா
  • மணி
  • விக்னேஸ்வரா

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் ஆரம்பத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் ஸ்ரீ குமார் என்பவர் வாசுதேவன் என்ற கதாபாத்திரத்திலும், இவரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி நாயர் என்பவர் லட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்தனர். இந்த தொடரில் ஏற்பட்ட கதையின் மாற்றத்தின் காரணமாக இருவரும் இந்த தொடரிலிருந்து விலகி இவர்களுக்கு பதிலாக அத்தியாயம் 226 முதல் ஈஸ்வர் என்பவர் வாசுதேவன் கதாபாத்திரத்திலும் பூவே பூச்சூடவா புகழ் கிருத்திகா லட்டு என்பவர் அத்தியாயம் 373 முதல் லட்சுமி மற்றும் நல்லம்மா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிகை மகாலஷ்மி என்பவர் பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு[தொகு]

  • மலையாளம்
    • இந்த தொடர் மலையாள மொழியில் சுமங்கலி பாவ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஜீ கேரளம் என்ற தொலைக்காட்ச்சியில் ஜூலை 1, 2019 முதல் வெள்ளி வரை இரவு 9:30 மாணிக்கு ஒளிபரப்பாகிறது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[4] மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை ஷாமிலி நாயர் பரிந்துரை
சிறந்த மருமகள் பரிந்துரை
சிறந்த மாமியார் சுலக்ஷ்ணா பரிந்துரை
சிறந்த வில்லி மகாலட்சுமி பரிந்துரை

பிரச்சனை[தொகு]

இந்த தொடரில் நடித்த ஈஸ்வர் மற்றும் மஹாலட்சுமி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததாகவும் இதனால் ஈஸ்வர் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு அவரை தாக்கியதாகவும் இருவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக தளத்தில் இவர்களின் பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது. இதன் காரணமாகவே இந்த தொடர் அவசர அவசரமாக முடிக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி பகல் 1 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தேவதையை கண்டேன்
(12 ஆகஸ்ட் 2019 - 21 பிப்ரவரி 2020)
அடுத்த நிகழ்ச்சி
முள்ளும் மலரும்
(4 மார்ச்சு 2019 – 10 சூன் 2019)
செம்பருத்தி
(மறு ஒளிபரப்பு)
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி பகல் 1:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தேவதையை கண்டேன்
(9 அக்டோபர் 2017 – 9 ஆகஸ்ட் 2019)
அடுத்த நிகழ்ச்சி
- நிறம் மாறாத பூக்கள்
(12 ஆகஸ்ட் 2019 - 21 பிப்ரவரி 2020)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதையை_கண்டேன்&oldid=3275014" இலிருந்து மீள்விக்கப்பட்டது