கோ 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோ 2 ( KO 2) 2016ம் ஆண்டு வெளிவந்த தமிழ் அரசியல் திரில்லர் திரைப்படம். அரசியலைத் தவறாகப் பயன்படுத்தும் ஒருவரை ஊடகத்தில் உள்ள ஒருவர் தண்டிப்பது இதன் மையக் கரு. இப்படத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்:[தொகு]

 • பாபி சிம்ஹா
 • நிக்கி கல் ராணி
 • பிரகாஷ்ராஜ்
 • ஜான் விஜய்
 • பால சரவணன்
 • மயில்சாமி
 • நாசர்
 • கருணாகரன்

படக்குழுவினர்:[தொகு]

 • இயக்கம்: சரத்
 • இசை: லியோன் ஜேம்ஸின்
 • தயாரிப்பு: எல்ரெட் குமார்
 • ஒளிப்பதிவு: ஆர்.சுந்தர் & வெங்கட்..என்
 • படத்தொகுப்பு:கே .ரிச்சர்ட் கெவின்

கதைச்சுருக்கம்:[தொகு]

சாமானிய மனிதனான குமரன்(பாபி சிம்ஹா) தமிழ்நாட்டின் முதலமைச்சரான யோகேஸ்வரனை(பிரகாஷ்ராஜ்) கடத்திவிடுகின்றார். இதனை விசாரிக்க உள்துறை அமைச்சரான தில்லைநாயகம்(இளவரசு) ஆய்வாளர் சந்தனபாண்டியனை(ஜான் விஜய்) நியமிக்கின்றார். சமூக சேவகரான குமாரசாமி(நாசர்), மற்றும் அவரது மகனையும் தன் அரசியல் சுயலாபத்திற்காக கொலை செய்த தில்லைநாயகத்தை பலிவாங்க முதலமைச்சரைக் கடத்துகிறார். மந்திரி மகன் பாலா(பாலசரவணன்) உதவியுடன் தமிழக முதல்வர் பிரகாஷ்ராஜை கடத்தி வைத்துக் கொண்டு , தன் கோரிக்கைகளை காவல் அதிகாரிகளிடம் வைக்கிறார். முதல்வரை மீட்கும் பொறுப்பு போலீஸிடமிருந்து என்.எஸ்.ஜி. கைக்கு மாறுகிறது. பின் இவரது கோரிக்கைகள் நிறைவேறியதா என்பது மீதிக் கதை.

விமர்சனம்[தொகு]

 • சமயம்: " கோ ''அளவிற்கு ரசிகனை "கோ - 2'' வும் கொண்டாட வைக்கிறது.
 • தினமலர்: " கோ ''அளவிற்கு ரசிகனை "கோ - 2'' ஓடும் திரையரங்குக்கு கோ டூ என கொண்டு வருவது நிச்சயம்.
 • தி இந்து: பாபி சிம்ஹா கதாபாத்திரத்திலும் மேலும் மெனக்கெட்டிருந்தால் ‘கோ 2’ இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்டையைக் கிளப்பியிருக்கும்.

குறிப்பு:[தொகு]

 1. https://www.zee5.com › Movies
 2. https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/ko-2-film-review/moviereview/52259709.cms
 3. https://tamil.filmibeat.com/movies/ko-2.html
 4. https://cinema.dinamalar.com/movie-review/1819/Ko-2/ [1]
 1. "Ko 2 from KV Anand?". behindwoods.com. பார்த்த நாள் 28 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_2&oldid=2908229" இருந்து மீள்விக்கப்பட்டது