வெள்ளித்திரை (திரைப்படம்)
தோற்றம்
வெள்ளித்திரை | |
---|---|
![]() | |
இயக்கம் | விஜி |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
கதை | விஜி |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | பிரித்விராஜ் பிரகாஷ் ராஜ் கோபிகா (நடிகை) சார்லி எம். எசு. பாசுகர் சரத் பாபு பிரதாப் போத்தன் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
விநியோகம் | டுயட் பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச் 7, 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெள்ளித்திரை 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை விஜி எழுதி, இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமானா உதயனு தரம் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இதில் பிருத்விராஜ், கோபிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
திரைப்படம்
[தொகு]நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
பிருத்விராஜ் | சரவணன் |
பிரகாஷ் ராஜ் | திலிப் |
கோபிகா (நடிகை) | மைதிலி |
எம். எசு. பாசுகர் | ராம் கோபால் சர்மா |
சரத் பாபு | பாலாஜி |
இளங்கோ குமாரவேல் | முஸ்தபா |
சத்யம் | முத்து |
சார்லி | கௌரவ தோற்றம் |
பிரதாப் போத்தன் | கௌரவ தோற்றம் |
ஜெயம் ரவி | கௌரவ தோற்றம் |
திரிசா | கௌரவ தோற்றம் |
லட்சுமி ராய் (நடிகை) | கௌரவ தோற்றம் |
சந்தியா | கௌரவ தோற்றம் |
சொர்ணமால்யா | கௌரவ தோற்றம் |
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "ஃபார்முலா நியதிப்படி பாடல் காட்சிகள் 'உள்ளேன் ஐயா' சொல்கின்றன. 'தையாரே தையா..!' பாடலின் இசையும் விஷூவலும் மட்டும் டிலைட் ட்ரீட்! சினிமாதான் கதைக் களம் என்றாலும், சினிமாவைப் பற்றியே சீரியஸாக விவா திக்க ஆரம்பிப்பதில் தொடங்குகிறது அலுப்பும் சலிப்பும்! எந்தவித லாஜிக்கும் இல்லாத காட்சிகள்; சவசவ என நீண்டு அலுப்புத் தட்டும் க்ளைமாக்ஸ்! மலையாள 'சூப்பர் ஹிட்'டை தமிழ்'படுத்தி' இருக்கிறார்கள்!" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: வெள்ளித் திரை". விகடன். 2008-03-19. Retrieved 2025-06-09.