கோபிகா (நடிகை)
Appearance
கோபிகா | |
---|---|
பிறப்பு | கேர்ளி அண்டோ 1 பெப்ரவரி 1984 ஒல்லூர், திருச்சூர், கேரளம் |
இனம் | இந்தியன்[1] |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2003–2009, 2013 |
வாழ்க்கைத் துணை | அஜிலேஷ் சாக்கோ (2008–தற்போதும்) |
பிள்ளைகள் | எமி, எய்தீன் [2] |
வலைத்தளம் | |
www |
கோபிகா (பிறப்பு: பிப்ரவரி 1, 1985) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் இயற்பெயர் கேர்ளி அண்டோ ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர் ஆவார். தனது பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பை கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள செயிண்ட் ராப்பெல்ஸில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார். பின்னர் தன் மேற்படிப்பை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பை படித்து முடித்தார்.
திருமண வாழ்க்கை
[தொகு]அஜிலேஷ் சாக்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களது திருமணம் சூலை 27, 2008 அன்று கேரளாவில் நடந்தது. இவர்களுக்கு எமி, எய்தீன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[3][4]
கோபிகா நடித்த திரைப்படங்கள்
[தொகு]தமிழ்
[தொகு]- 2007 - வீராப்பு
- 2006 - எம் மகன்
- 2006 - அரண்
- 2005 - தொட்டி ஜெயா
- 2005 - பொன்னியின் செல்வன்
- 2005 - கனா கண்டேன்
- 2004 - ஆட்டோகிராப்
- 2004 - 4 ஸ்டூடெண்ட்ஸ்
கன்னடம்
[தொகு]- கனசின லோகா
தெலுங்கு
[தொகு]- லேத்த மனசுலு
மலையாளம்
[தொகு]- கிர்திச்சக்கரா
- சாந்துப்பொட்டு
- பச்சக்குதிரா
- ஃபோர் த பீப்பில்
- பிரனயமனிதூவல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil filmdoms top stars ' Kerala women". The Telegraph (Calcutta, India). 14 May 2006. http://www.telegraphindia.com/1060514/asp/look/story_6217361.asp.
- ↑ http://www.marunadanmalayali.com/cinema/stardust/gopika-have-second-baby-in-australia-7485
- ↑ http://cinema.dinamalar.com/tamil-news/1993/cinema/Kollywood/Gopika-gives-birth-to-baby-girl-in-Ireland.htm
- ↑ https://tamil.filmibeat.com/heroines/actress-gobika-delivers-boy-baby-031546.html