உள்ளடக்கத்துக்குச் செல்

நா. முத்துக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நா. முத்துகுமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நா. முத்துக்குமார்
பிறப்பு(1975-07-12)சூலை 12, 1975 [1]
காஞ்சிபுரம், தமிழ் நாடு, இந்தியா
இறப்பு14 ஆகத்து 2016(2016-08-14) (அகவை 41)
சென்னை
இறப்பிற்கான
காரணம்
மஞ்சள் காமாலை
பணிபாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர்
வாழ்க்கைத்
துணை
ஜீவலஷ்மி[2]
பிள்ளைகள்மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி[2]

நா. முத்துக்குமார் (Na. Muthukumar; 12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர்.[3] நான்கு வயதில் தாயை இழந்தவர்.[4] சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

கல்வி

[தொகு]

காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரைப் படித்துத் தேறினார். பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இயல்பியல் பயின்று 88% மதிப்பெண் பெற்று அறிவியல் இளவர் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இவர் எழுதிய தூர் என்ற கவிதையே முதுகலையில் இவருக்குப் பாடமாக இருந்தது. பின்னர் "தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 1990 முதல் 2000 வரை" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார்.[5]

பணி

[தொகு]

தொடக்கத்தில் திரைப்பட இயக்குநராக சென்னை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் இணைய விண்ணப்பித்தார். ஆனால், இடங்கிடைக்கவில்லை.[6]

எனவே, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். இயக்குநர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007),வாரணம் ஆயிரம் (2008) ஆகியன போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியிருந்த இவர் [7], 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.[8]

இவர் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியில் ஜீவலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலட்சுமி என்ற மகளும் இருந்தனர்.

மறைவு

[தொகு]

2016 ஆகத்து 14 அன்று காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.[9][10]

இயற்றிய பாடல்களில் சில

[தொகு]
ஆண்டுதிரைப்படம்பாடல்கள்
1999மலபார் போலீஸ்கோலிவுட் முதல்
மின்சார கண்ணாஓ அங்கில்
ஹலோசலாம் குலாமு
மானசீக காதல்ஆனந்த காற்றே & கந்தா கடம்பா
ஊட்டிஓ லில்லி & ஓ வெண்ணிலா
இரணியன்சந்திரனே சாட்சி & என் மாமன் மதுரை
உன்னருகே நானிருந்தால்சின்ன சின்ன பூவே
2000வானத்தைப் போலஎங்கள் வீட்டில் எல்லா
ஏழையின் சிரிப்பில்சக்கரவள்ளி
ஜேம்ஸ் பாண்டுகண்ணென்ன மின்சாரமா
வீரநடைகாலையிலே & முத்து முத்தா
சபாஷ்தேங்க் யூ & உலகைச் சுற்றி
2001டும் டும் டும்
கலகலப்புஅம்முரத கடலே
நந்தாஓர் ஆயிரம் யானை
லவ் மேரேஜ்கண்ணாலே கொல்லாதே & கீரவாணி
2002விவரமான ஆளுஅடியே ஆரவள்ளி & ஏய் மாமா
உன்னை நினைத்துசாக்லெட் சாக்லெட்
ரன்தேரடி வீதியில்
சமஸ்தானம்பெண்ணே பெண்ணே
பகவதிசாயோ சாயோ
ஏப்ரல் மாதத்தில்கனவுகள் பூக்கும்
2003தூள்கொடுவா மீசை
வசீகராஒரு தடவை, பூப்போல தீப்போல & வேணா வேணா
அன்புமணப்பொண்ணு அழகா
ஜூலி கணபதிஎனக்குப் பிடித்தப் பாடல்
ஸ்டூடண்ட் நம்பர் 1விழாமலே இருக்க முடியுமா, நா அழுக்கானாலும் அம்சமா, உன் குற்றமா, எங்கே செல்லும், சல்யூட் போடு, காலேஜ் கேன்டீன் & கடலோர கவிதையே
மிலிட்டரிசிட்டுக்குருவி
சேனாநாட்டுக்கோழி குழம்பு
வெல்டன்இந்திய மேப்பை
அன்பே அன்பேவாஸ்து சாஸ்திரம்
சாமிதிருநெல்வேலி அல்வாடா, பிடிச்சிருக்கு & வேப்பமரம் புளியமரம்
பார்த்திபன் கனவுதீராத டும்
காதல் கொண்டேன்தேவதையை கண்டேன், நெஞ்சோடு, தொட்டு தொட்டு & 18 வயதில்
விசில்விசில் அடிக்கும் வதனா
ஆஹா எத்தனை அழகுஆட்டுக்குட்டி எல்லாம்
காதல் கிசு கிசுஆழும் வேலும் & அடடா
ஈர நிலம்மேகம் கருக்குது
தென்னவன்வினோதனே
திவான்ஒரு தாலாட்டு
திருடா திருடிஆயுர்வேத அழகி
திருமலைதாம்தக்க தீம்தக்க
பிதாமகன்கொடி ஏத்தி வைப்போம்
ஜூட்ஆடிவரும் அழகியே & கட்டபொம்மா கட்டபொம்மா
இன்றுபொன்மாலை, சோக்கா பாக்குற & சல்வார் பூவனம்
2004கோவில்காலேஜிக்கு போவோம்
புதுக்கோட்டையிலிருந்து சரவணன்புதுக்கோட்டை சரவணன்
தென்றல்பச்சைக்கிளி
வர்ணஜாலம்மத மத மதன்னு
கில்லிசூர தேங்கா
எதிரிபோடு நண்பா சக்க
அருள்உக்கடத்து பப்படமே & புண்ணாக்குனு
ஜோர்ஜோர் படா ஜோர் & மம்மி செல்லமா
சுள்ளான்சண்டக்கோழி
அரசாட்சிஇப்படியே விட்டுவிடு
கிரிஅட்ரா சக்க, ரெண்டு காலுடா & ஒப்பனக்கார வீதியிலே
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமிசென்னை செந்தமிழ்
போஸ்நிஜமா நிஜமா
7ஜி ரெயின்போ காலனிஅனைத்துப் பாடல்களும்
சத்திரபதிஒரே ஒரு ராத்திரிக்கு
மன்மதன்வானமென்ன உயரங்காட்டு & காதல் வளர்த்தேன்
காதல்அனைத்துப் பாடல்களும்
2005ஐயாஅத்திரி பத்திரி, அய்யாத்துரை (சோகம்) & தினம் ஐயானு
தேவதையை கண்டேன்மாமா பையா
ஜிதிருட்டு ராஸ்கேல்
மண்ணின் மைந்தன்இது லேடீஸ் ஹாஸ்டல்
மாயாவிகாத்தாடி போலே
லண்டன்கிமு கிபி
தக திமி தாஎத ஊத்தி செஞ்சேனோ, ராயல்சீம ராணி & சுலுக்கி சுலுக்கெடுக்கும்
சந்திரமுகிகொக்கு பற பற
சச்சின்கண்மூடி திறக்கும்போதே
ஜித்தன்கோயமுத்தூர் பொண்ணு
அன்னியன்காதல் யானை
இங்கிலீஸ்காரன்அனைத்துப் பாடல்களும்
பிப்ரவரி 14லைலா மஞ்சு
ஏபிசிடியார் போட்ட கோலம்
தொட்டி ஜெயாஅச்சு வெல்லம் & தொட்டா பவரு டா
கஜினிசுட்டும் விழி சுடரே
அன்பே வாகால் கொலுசே, லொயலா & ஒலிப் லைலா
ஆணைபிகருடன் ஒருநாள்
ஒரு கல்லூரியின் கதைஅனைத்துப் பாடல்களும்
ஆறுசோடா பாட்டில், பாக்காதே என்ன, ஃப்ரியா விடு, நெஞ்சம் என்னும் & துரோகம்
சண்டக்கோழிஎன்னமோ நடக்கிறதே & கும்தலக்கடி கும்
2006பரமசிவன்ஆசை தோசை
சரவணாசா பூ த்ரி போட்டு
டிஷ்யூம்கிட்ட நெருங்கிவாடி
கள்வனின் காதலிஏனோ கண்கள்
தம்பிகனவா என்று, என் காதல், பூவனத்தில் மரம் & என்னம்மா தேவி ஜக்கம்மா
கோவை பிரதர்ஸ்அனைத்துப் பாடல்களும்
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறதுஇலையுதிர் காலம் & காதலைப் பிரிப்பது
தலைநகரம்ஏதோ நினைக்கிறேன் & மதி மதி
புதுப்பேட்டைஅனைத்துப் பாடல்களும்
பாரிஜாதம்உன்னைக் கண்டனே
ஆச்சார்யாஅனைத்துப் பாடல்களும்
தொடாமலேதொட்டு தொட்டு & வெண்ணிலவே
உனக்கும் எனக்கும்ஆகாயம் இத்தனை நாள், கிளியே கிளியே & பூப்பறிக்க நீயும் போகாதே
திமிருமானா மதுர & தித்திக்கிற வயசு
எம் மகன்கல்லூரி ஜெனரேசன்
ஜாம்பவான்பன மரத்துல
காதல் என்பது
நெஞ்சிருக்கும் வரைகாதலியே & புடிச்சிருக்கு
திருவிளையாடல் ஆரம்பம்கண்ணுக்குள் ஏதோ
வெயில்'சேத்துவடம்' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும்
குமரன்கோ கோ சகோ & சொர்க்கத்தில் பூக்கும்
2007போக்கிரிவசந்த முல்லை
தாமிரபரணிதாலியே தேவையில்லை பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களும்
தீபாவளிடோலு பஜே, காதல் வைத்து காதல் வைத்து & போகாதே போகாதே நீ
சபரி'ஒசாமா ஒசாமா' பாடலை தவிர்த்து அனைத்து பாடல்களும்
மணிகண்டாஹே முகுந்தா, இஞ்சி மறுப்பா & மாமா மாமா
திரு ரங்காமதுரவீர, என்னை ஏதோ & தகதிமி
நீ நான் நிலாடார்லிங் ஓ டார்லிங், என் காதல் தெய்வ & உன்னை சந்தித்தேன்
சிவாஜிபல்லேலக்கா.. காவிரி ஆறும் & சிவாஜி தீம்
வியாபாரிவெற்றியை கண்டவன்
கிரீடம்அனைத்து பாடல்களும்
பள்ளிக்கூடம்இந்த நிமிடம்
சத்தம் போடாதேஅனைத்துப் பாடல்களும்
பிறகு
மலைக்கோட்டைகந்தா கடம்பா
கற்றது தமிழ்அனைத்துப் பாடல்களும்
அழகிய தமிழ் மகன்நீ மரிலின் மன்றோ & வளையப்பட்டி தவிலே தவிலே
பொல்லாதவன்மின்னல்கள் கூத்தாடும்
வேல்இந்த ஊரில், உன்ன போல, ஆயிரம் ஜன்னல், கோவாக்காரக்கிளியே
ஓரம் போ'ஓரம் போ தீம்' தவிர்த்து அனைத்துப் பாடல்களும்
எவனோ ஒருவன்உனது எனது
கல்லூரிஅனைத்துப் பாடல்களும்
புலி வருதுஅனைத்துப் பாடல்களும்
2008பீமாமுதல் மழை
வாழ்த்துகள்அனைத்துப் பாடல்களும்
வெள்ளித்திரைஉயிரிலே என் உயிரிலே
சண்டைபோக்கிரினா விஐய்டா & ஆத்தாடி
யாரடி நீ மோகினிஅனைத்துப் பாடல்களும்
சந்தோஷ் சுப்பிரமணியம்அடடா அடடா & உயிரே உயிரே பிரியாதே
சாது மிரண்டா
அறை எண் 305ல் கடவுள்காதல் செய்
குருவிஹேப்பி நியூ இயர் & குருவி குருவி
பாண்டிஉன் கண்கள்
தாம் தூம்ஆழியிலே முட்குளிக்கும் & அன்பே என் அன்பே
ஜெயம் கொண்டான்சுற்றிவரும் பூமி
பொய் சொல்லப் போறோம்அனைத்துப் பாடல்களும்
சக்கரக்கட்டிஏலே, ஐ மிஸ் யூ & டேக்சி டேக்சி
சேவல்கண்ணம்மா கண்ணம்மா, நம்ம ஊரு நல்லாருக்கு, ஒடமரத்து முள்ளபோல & பார்வையிலே ஒரு ஏக்கம்
வாரணம் ஆயிரம்ஏத்தி ஏத்தி
தெனாவட்டுஅனைத்துப் பாடல்களும்
மகேஷ், சரண்யா மற்றும் பலர்காற்றே காற்றே
சிலம்பாட்டம்மச்சான் மச்சான்
2009சிவா மனசுல சக்திஅனைத்துப் பாடல்களும்
தநா-07-அல 4777ஐ போன் & கண்ணீரைப் போலே
1977வங்க கடல்
அயன்ஓ சூப்பர் நோவா, பலபலக்கிற பகலாநீ & விழி மூடி யோசித்தால்
மரியாதையார் பார்த்தது
சா பூ த்ரி சா பூ த்ரி , மழையே மழையே & அது ஒரு அடைமழைக்காலம்
மாசிலாமணிநாக்க ரொம்ப நாக்க & ஓடி ஓடி விளையாட
முத்திரைஓம் சாந்தி ஓம் & ஜுலை மாதத்தில்
நாடோடிகள்யக்கா யக்கா
வாமனன்அனைத்துப் பாடல்களும்
ஐந்தாம் படை'ஓரம்போ'பாடல் தவிர அனைத்து பாடல்களும்
சொல்ல சொல்ல இனிக்கும்சகியே சகியே & ராஜாத்தி
ஆதவன்டமுக்கு டமுக்கு
கண்டேன் காதலைசுத்துது சுத்துது & ஒரு நாள் இரவில்
2010ஜக்குபாய்வா... தினம் தினம்
அவள் பெயர் தமிழரசிபாளையங்கோட்டை
கச்சேரி ஆரம்பம்கடவுளே கடவுளே & வித்தை வித்தை
அங்காடித் தெருஅனைத்துப் பாடல்களும்
பையாஅனைத்துப் பாடல்களும்
சுறாதஞ்சாவூர் ஜில்லாக்காரி
சிங்கம்என் இதயம் & சிங்கம் சிங்கம்
களவாணிஅனைத்துப் பாடல்களும்
மதராசபட்டினம்அனைத்துப் பாடல்களும்
தில்லாலங்கடிபட்டு பட்டு பட்டாம்பூச்சி & சொல் பேச்சு
தம்பி அர்ச்சுனாஹஜரே ஹஜரே & மழை மேகம் மழை
பாணா காத்தாடிஎன் நெஞ்சில் & ஒரு பைத்தியம் பிடிக்குது
காதல் சொல்ல வந்தேன்'ஓ சாலா'பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும்
நான் மகான் அல்லவா வா நிலவு & ஒரு மாலை நேரம்
பாஸ் என்கிற பாஸ்கரன்அனைத்துப் பாடல்களும்
இரத்தசரித்திரம் (மறுஉருவாக்கம்)அனைத்துப் பாடல்களும்
அய்யனார்அனைத்துப் பாடல்களும்
2011சிறுத்தைநான் ரொம்ப ரொம்ப & செல்லம் வாடா செல்லம்
அவர்களும் இவர்களும்என்ன தவம் செஞ்சுபுட்டேன்
வானம்வானம், வூ யம் ஐ & நோ மணி நோ மணி
நர்தகிஅனைத்துப் பாடல்களும்
எங்கேயும் காதல்திமு திமு
எத்தன்
சபாஷ் சரியான போட்டிவந்துட்டான்யா & ஓடு மாமே
அவன் இவன்அனைத்துப் பாடல்களும்
தேநீர் விடுதி"ஒரு மாலை பொழுதில்"
தெய்வ திருமகள்அனைத்துப் பாடல்களும்
வெப்பம்அனைத்துப் பாடல்களும்
புலி வேசம்பாய் பிரண்ட் & வாரேன் வாரேன்
வந்தான் வென்றான்நகருதே நகருதே
வெடிஇப்படி மழை
ரா ராEthotho Ethotho
7ஆம் அறிவுமுன் அந்தி & எல்லேலம்மா
போராளியார் இவன் & எங்கிருந்து
மம்பட்டியான்மலையூரு. ரீமிக்ஸ் & ஏதோ ஆகுதே
மகாராஜா
2012விளையாட வா"வானம் எந்தன்"
நண்பன்ஹார்ட்டிலே பேட்டரி & நல்ல நண்பன்
வேட்டைஅனைத்துப் பாடல்களும்
மெரினாவணக்கம் சென்னை, காதல் ஒரு தேவதை & மெரினா தீம்
அரவான்'ஊரே ஊரே என்ன பெத்த' பாடலை தவிர்த்து அனைத்துப் பாடல்களும்
கொண்டான் கொடுத்தான்"தஞ்சாவூரு கோபுரம் அழகு"
கழுகுஆத்தாடி மனசுதான்
உள்ளம்கண்ணை திறந்து
ஒரு கல் ஒரு கண்ணாடிஅனைத்துப் பாடல்களும்
வழக்கு எண் 18/9அனைத்துப் பாடல்களும்
மறுபடியும் ஒரு காதல்மே மாதம்
பில்லா IIஅனைத்துப் பாடல்களும்
மாற்றான்ரெட்டை கதிரே
துப்பாக்கிவெண்ணிலவே
அம்மாவின் கைபேசிஎன்ன செஞ்சு போற & ராஜபாட்டை
நீதானே என் பொன் வசந்தம்அனைத்துப் பாடல்களும்
சட்டம் ஒரு இருட்டறைஆதாம் ஏவல், திரும்ப திரும்ப & உயிரே உயிரே
2013சமர்அனைத்துப் பாடல்களும்
வத்திக்குச்சிகுரு குரு
கேடி பில்லா கில்லாடி ரங்காஒரு பொரம்போக்கு & தெய்வங்கள் எல்லாம்
சேட்டைலைலா லைலா
ஆதலால் காதல் செய்வீர்ஆராரோ பாட இங்கு
மூன்று பேர் மூன்று காதல்அனைத்துப் பாடல்களும்
சோக்காலிஹே சக்கரகட்டி
தில்லுமுல்லுஆஜா ஆஜா
துள்ளி விளையாடுவா மச்சி ஊத்துக்கோ & யார் இவளோ
பட்டத்து யானைஎன்ன ஒரு, பூசணிக் காய் & தலகால் புரியல
தலைவாஅனைத்துப் பாடல்களும்
தங்க மீன்கள்அனைத்துப் பாடல்களும்
மத்தாப்புஅனைத்துப் பாடல்களும்
வணக்கம் சென்னைஓ பெண்ணே & ஹே
ஆல் இன் ஆல் அழகு ராஜாஅனைத்துப் பாடல்களும்
தலைமுறைகள்அனைத்துப் பாடல்களும்
புதிய திருப்பங்கள்அனைத்துப் பாடல்களும்
2014பிரம்மன்வானத்திலே
டமால் டுமீல்ஓடி ஓடி
நான் தான் பாலாஉயிரே உனக்காகே, அம்மா ரொம்ப, அறியாம, கண்மணி
என்னதான் பேசுவதோ
அதிதிசொல்ல சொல்ல உள்ளமெங்கும்
சைவம்அனைத்துப் பாடல்களும்
அஞ்சான்ஏக் தோ தீன் சார் பாஞ்ச்
பூஜைஅனைத்துப் பாடல்களும்
நெருங்கி வா முத்தமிடாதேஅனைத்துப் பாடல்களும்
திருடன் போலீஸ்'மூடுபனிக்குள்' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும்
அழகிய பாண்டிபுரம்கடவுளிடம்
2015டார்லிங்'வந்தா மலை' பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களும்
டூரிங் டாக்கீஸ்
காக்கி சட்டைகாக்கி சட்டை
நண்பேன்டாதேனே தேனே செந்தேனே
சோன்பப்டிஹே சாக்லெட்ஸ்
காக்கா முட்டை
நண்பர்கள் நற்பணி மன்றம்கட்டழகி, பாக்கெட்டில் காசு & உன்னை என்னை
பாபநாசம்அனைத்துப் பாடல்களும்
ஆவி குமார்அனைத்துப் பாடல்களும்
இது என்ன மாயம்அனைத்துப் பாடல்களும்
சகலகலா வல்லவன்புஜிமா புஜிமா & பல்பு வாங்கிட்டேன்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
திரிஷா இல்லனா நயன்தாராமுத்தம் கொடுத்த
ஈட்டிஉன் சுவாசம் & குய்யோ முய்யோ
2016சாகசம்ஏங்ரி பேர்ட், ஓ மது & சாயங்க கு
அஞ்சலநக்கலு மாமா & யாரைக் கேட்பது
சேதுபதிஅனைத்துப் பாடல்களும்
புகழ்
ஒன்பது குழி சம்பத்பங்காளி, என்னென்ன இதயத்திலே, & ஒப்பாரி
கோ 2
தெறிஎன் ஜீவன்
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு
அம்மா கணக்கு
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்மாயா ஓ மாயா
மீண்டும் ஒரு காதல் கதை
2017யாக்கைநீ என் கண்கள்
தரணிஅனைத்துப் பாடல்களும்
திட்டிவாசல்அனைத்துப் பாடல்களும்
20182.0புல்லினங்கால்
யாகன்
2019சர்வம் தாளமயம்மாயா மாயா
பெட்டிக்கடை சுடலமாட சாமிக்கிட்ட
ஜூலை காற்றில்மேற்கிலே மேற்கிலே & கண்களின் ஓரமாய்

படைப்புகள்

[தொகு]

இவர் பாட்டெழுதிய சில திரைப்படங்கள்:

நூல்கள்

[தொகு]

கவிதைத்தொகுப்புகள்

[தொகு]
  1. நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)[11]
  2. பட்டாம்பூச்சி விற்பவன்
  3. ஆணா ஆவண்ணா
  4. என்னை சந்திக்க கனவில் வராதே
  5. குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
  6. தூசிகள்

புதினம்

[தொகு]
  1. சில்க் சிட்டி

கட்டுரைத் தொகுப்புகள்

[தொகு]
  • கிராமம் நகரம் மாநகரம்[12]
  1. பால காண்டம்
  2. வேடிக்கை பார்ப்பவன்
  3. அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரைத்தொடர்)

விருதுகள்

[தொகு]
  • 2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது[13]
  • 2006: வெயில் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
  • 2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
  • 2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
  • 2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Correspondent, Vikatan. "நான் நா.முத்துக்குமார் ஆனது எப்படி?" (in ta). https://www.vikatan.com/arts/miscellaneous/39443--2.
  2. 1 2 DN (16 ஆகத்து 2016). "என்னுடைய குடும்பத்துக்கு ராயல்டி வழங்கப்படவேண்டும்: நா. முத்துக்குமார் விருப்பம்!". தினமணி. Retrieved 16 ஆகத்து 2016.
  3. "நா.முத்துக்குமார் பிறந்த நாள் நினைவுகள்: காலத்தால் அறுக்க முடியாத கவிதை உறவு". Hindu Tamil Thisai. Retrieved 2021-05-16.
  4. MALATHI RANGARAJAN (February 7, 2013). "Life's a lyric". The Hindu. Chennai. http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece. பார்த்த நாள்: February 08, 2013.
  5. புதிய தலைமுறை, 2009-10-29; பக்.51-52
  6. புதிய தலைமுறை 2009 10 29 பர். 51
  7. "பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்". தினத்தந்தி. 14 ஆகத்து 2016. Retrieved 16 ஆகத்து 2016.
  8. "நா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்!". மாற்று. Retrieved ஆகத்து 17, 2016.
  9. "பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்". Seythigal.com. ஆகத்து 14, 2016. http://www.seythigal.com/?p=11719. [தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Shocking: Na Muthukumar passes away due to jaundice and high fever". The Times of India. 14 ஆகத்து 2016. Retrieved 14 ஆகத்து 2016.
  11. "பட்டாம்பூச்சி விற்றவன்!". Hindu Tamil Thisai. Retrieved 2021-05-16.
  12. "இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்". ThanthiTV.com. 2020-07-12. Archived from the original on 2021-05-16. Retrieved 2021-05-16.
  13. Venkatesan (14 ஆகத்து 2016). "பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்". தினமணி. Retrieved 16 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :நா. முத்துக்குமார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._முத்துக்குமார்&oldid=4437189" இலிருந்து மீள்விக்கப்பட்டது