சோடியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அயோடைடு
Sodium iodide
Sodium iodide
Sodium iodide
Sodium iodide
இனங்காட்டிகள்
7681-82-5 Y
13517-06-1 (dihydrate) N
ChEBI CHEBI:33167 Y
ChEMBL ChEMBL1644695 N
ChemSpider 5048 Y
InChI
  • InChI=1S/HI.Na/h1H;/q;+1/p-1 Y
    Key: FVAUCKIRQBBSSJ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HI.Na/h1H;/q;+1/p-1
    Key: FVAUCKIRQBBSSJ-REWHXWOFAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5238
வே.ந.வி.ப எண் WB6475000
SMILES
  • [Na+].[I-]
UNII F5WR8N145C Y
பண்புகள்
NaI
வாய்ப்பாட்டு எடை 149.89 கி/மோல்
தோற்றம் வெண்மை நிறத் திண்மம்
பளபளப்பானது
மணம் மணமற்றது
அடர்த்தி 3.67 கி/செ.மீ3
உருகுநிலை 661 °C (1,222 °F; 934 K)
கொதிநிலை 1,304 °C (2,379 °F; 1,577 K)
158.7 கி/100 மி.லி (0 °செ)
184.2 கி/100 மி.லி (25 °செ)
227.8 கி/100 மி.லி (50 °செ)
294 கி/100 மி.லி (70 °செ)
302 கி/100 மி.லி (100 °செ) [1]
காடித்தன்மை எண் (pKa) 8-9.5
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.7745
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
Octahedral
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−288 kJ·mol−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
91 J·mol−1·K−1[2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும், கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் புளோரைடு
சோடியம் குளோரைடு
சோடியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் அயோடைடு
பொட்டாசியம் அயோடைடு
ருபீடியம் அயோடைடு
சீசியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

சோடியம் அயோடைடு (Sodium iodide) என்பது NaI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அயனியும் அயோடைடு அயனியும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. கரிம வேதியியலில் இந்தப் படிகத் திடப்பொருள் முக்கியமான ஓர் உணவுச் சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அமில அயோடைடுகளுடன் சோடியம் ஐதராக்சைடு சேர்ப்பதால் சோடியம் அயோடைடு உருவாகிறது.

பயன்கள்[தொகு]

உணவுச் சேர்க்கைப் பொருளாக[தொகு]

சோடியம் அயோடைடும் பொட்டாசியம் அயோடைடும் பொதுவாக அயோடின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய பயன்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் அயோடின் கலந்த உணவு உப்பில் 100000 பகுதிகள் சோடியம் குளோரைடுடன் ஒரு பகுதி சோடியம் அல்லது பொட்டாசியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது[3]

கரிமத் தொகுப்பு வினைகள்[தொகு]

ஆல்க்கைல் குளோரைடுகளை ஆல்க்கைல் அயோடைடுகளாக மாற்றுவதற்கு சோடியம் அயோடைடு பயன்படுகிறது. பிங்கெல்சிடீன் வினை எனப்படும் இவ்வினையில் அசிட்டோனில் சோடியம் குளோரைடு கரைவதில்லை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வினைவிளை பொருள் தருவிக்கப்படுகிறது.

R-Cl + NaI → R-I + NaCl

அணுக்கரு மருத்துவத்தில்[தொகு]

[125I]NaI மற்றும் [131I]NaI உள்ளிட்ட சோடியத்தின் சில கதிரியக்க உப்புகள், தைராய்டு புற்று மற்றும் உயர் தைராய்டு மிகைப்பு போன்ற நோய்களுக்கான கதிரியக்க மருத்துவச் சிகிச்சையில் பயன்படுகின்றன[4] அல்லது கதிரியக்கப் பெயரிடலில் சுவடுகாண் தனிமமாக ஓரிடத்தான்களின் பாதையை கண்டறியப் பயன்படுகின்றன. ( அயோடினின் ஓரிடத்தான்கள்: மருத்துவம் மற்றும் உயிரியலில் கதிரியக்க அயோடின்கள் I-123, I-124, I-125, மற்றும் I-131).

தாலியம் கலப்பிடப்பட்ட NaI(Tl) மினுமினுப்பாக்கிகள்[தொகு]

சோடியம் அயோடைடு தாலியத்துடன் சேர்க்கப்பட்டு செயலூக்கப்படுகிறது. பின்னர் இது கதிர்வீச்சு அயனியாக்கத்தின் போது போட்டன் எனப்படும் ஒளியன்களை ( மினுக்குகள்) உமிழ்கிறது. இவையே அடர்வு காணி அல்லது மினுமினுப்பு காணியாகவும் மரபார்ந்த வகையில் அணுக்கரு மருந்தாகவும் , புவி இயற்பியல், அணுக்கரு இயற்பியல் மற்றும் சுற்றுச் சூழல் அளவீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பரவலாக NaI(Tl) மினுமினுக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் அயோடைடு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், NaI(Tl) படிகங்கள் காற்றுப்புகாமலைடத்த ஒளிபெருக்கிக் குழாய்களில் பிணைக்கப்படுகின்றன. கதிர்வீச்சுக் கடினத்தன்மை, பின்னொளிர்வு, ஒளிபுகும் பண்பு முதலிய சில அளபுருக்களை படிக வளர்ச்சியில் சில மாறுதல்களைச் செய்வதன் மூலமாக அடையமுடியும். உயர்நிலை செயலூக்கம் பெற்ற படிகங்கள் அதிகத் தரமிக்க எக்சு கதிர் உணரிகளாகப் பயன்படுகின்றன. ஒற்றை அல்லது பலபடிக சோடியம் அயோடைடுகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய அதிகபட்ச அலைநீள வெளிப்பாட்டு அளவு 415 நா.மீஆகும்[5]

கரைதிறன் தரவுகள்[தொகு]

சோடியம் குளோரைடு அல்லது சோடியம் புரோமைடு போலில்லாமல் சோடியம் அயோடைடு சில கரிமக் கரைப்பான்களில் மிக நன்றாக கரைகின்றது. பல்வேறு கரைப்பான்களில் 25 0 செல்சியசு வெப்பநிலையில் ஒரு கிராம் NaI/100 கி கரைப்பானில் சோடியம் அயோடைடு பெற்றுள்ள கரைதிறன் அளவுகள் இங்கு தரப்பட்டுள்ளன[6]

H2O 184.2
திரவ அமோனியா 162
நீர்ம கந்தக டை ஆக்சைடு 15
மெத்தனால் 62.5 - 83.0
பார்மிக் அமிலம் 61.8
அசிட்டோ நைட்ரைல் 24.9
அசிட்டோன் 50.4425
பார்மமைடு 57 - 85
அசிட்டமைடு 32.3 (41.5 °C)
இருமெத்தில்பார்மமைடு 3.7 - 6.4
இருகுளோரோமீத்தேன் 0.009 [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Seidell, Atherton (1919). Solubilities of inorganic and organic compounds c. 2. D. Van Nostrand Company. பக். 655. http://books.google.com/books?id=t4LSvgY7uIEC&pg=PA655. 
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பக். A23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. https://archive.org/details/chemicalprincipl0000zumd_u9g0. 
  3. Lyday, Phyllis A. "Iodine and Iodine Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim, ISBN 978-3-527-30673-2 எஆசு:10.1002/14356007.a14_381 Vol. A14 pp. 382–390.
  4. The Free Dictionary: sodium iodide 131I
  5. "Scintillation Materials" (PDF). Archived from the original (PDF) on 2016-04-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
  6. Burgess, J. (1978). Metal Ions in Solution. New York: Ellis Horwood. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85312-027-7. https://archive.org/details/metalionsinsolut0000john. 
  7. Danil de Namor, A.F.; J. Chem. Soc., Faraday Trans. 1, 1989,85, 2705-2712 DOI: 10.1039/F19898502705

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_அயோடைடு&oldid=3848849" இலிருந்து மீள்விக்கப்பட்டது