ஆகஸ்டு 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 10 கிரிகோரியன் ஆண்டின் 222வது நாளாகும். நெட்டாண்டுகளில் 223வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 612 - அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டான்.
- 610 - முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், "லாய்லாட் ஐ-காதர்" நாள் எனப்படுகிறது.
- 955 - புனித ரோமப் பேரரசன் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தான்.
- 1519 - மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவில் நகரில் இருந்து புறப்பட்டன.
- 1675 - ரோயல் கிறீனிச் வானாய்வகத்துக்கான அடிக்கல் லண்டனில் நாட்டப்பட்டது.
- 1680 - நியூ மெக்சிகோவில் ஸ்பானிய குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது.
- 1741 - குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடனான போரில் டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவனைச் சிறைப்பிடித்தார்.
- 1776 - அமெரிக்காவின் விடுதலைப் பிரகடன செய்தி லண்டனைப் போய்ச் சேர்ந்தது.
- 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.
- 1809 - குவிட்டோ (தற்போதய ஈக்குவாடோரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1821 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.
- 1904 - ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.
- 1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
- 1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
- 2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி).
- 2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர்.
- 2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1894 - வி. வி. கிரி, 4வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 1980)
இறப்புகள் [தொகு]
- 1790 - பிலிப்பு தெ மெல்லோ, தமிழ் டச்சு அறிஞர் (பி. 1723)
- 1899 - சி. தியாகர், நல்லூரைச் சேர்ந்த தமிழறிஞர்
- 1980 - யாஹ்யா கான், பாகிஸ்தான் அதிபர் (பி. 1917)
சிறப்பு நாள் [தொகு]
- எக்குவாடோர் - விடுதலை நாள் (1809)