இந்திய அணுசக்திப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய அணுசக்திப் பேரவை (Atomic Energy Commission) இந்திய அரசின் அணு சக்தித் துறையின் கீழ் செயல்படும் பேரவையாகும். இந்திய அணு சக்தித் துறை நேரடியாக இந்தியப் பிரதம மந்திரியின் மேற்பார்வையில் செயல்படுகிறது.[1] 1948 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார். ‎[2] அதற்கு சில மாதங்களுக்கு முனனால் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித்துறை அமைச்சகம் நிறுவப்பெற்றது. 1954 ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் ஆணையின் படி, பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை செயல் படத் துவங்கியது. அதன் பிறகு, மத்திய அரசு இந்திய அணுசக்திப் பேரவையை அணுசக்தித்துறையின் கீழ் அமைப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து, அதை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் ஒரு நகலை பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் 1954 ஆம் ஆண்டில் பேரவை உறுப்பினர்களின் முன்வைத்தார். இப்பேரவையின் முதல் தலைவராக ஹோமி பாபா பொறுப்பேற்றார்.

இந்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, அணுசக்தித் துறையின் செயலர் இப்பேரவையின் பதவி வழித் தலைவராக செயல்படுவார். ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் அறிவுரையின் படி, இக்குழுவின் இதர உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். தற்பொழுது இப்பேரவையின் தலைவராக டாக்டர் எஸ். பானர்ஜி செயல்பட்டு வருகிறார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. "Department of Atomic Energy, Government of India". Dae.gov.in.. 2009-11-03. http://www.dae.gov.in./contacts.htm. Retrieved 2010-08-06
  2. ஆகஸ்டு 10‎
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்