இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம் (Biotechnology Regulatory Authority of India, BRAI) ஒன்றை நிறுவிட இந்திய அரசு ஒரு வரைவு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.[1][2] . இதன் படி இந்த ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற மற்றும் சட்டப்படியான அமைப்பாக இருக்கும். இந்த ஆணையம் உயிரித் தொழில்நுட்பத்தின் தொடர்பான உயிரிகளின் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பொருட்களின் ஆய்வு, போக்குவரத்து, இறக்குமதி, தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்தும் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் கட்டுப்படுத்தும்.

இந்த சட்ட வரைவு மரபு மாற்றப் பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளதாக எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.[3]

ஆணையத்தின் அமைப்பு[தொகு]

இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கபடுவார்கள். விவசாயத்தில், சுகாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அறிவியல், உயிரி தொழில்நுட்பம் பயன்பாடுகளில் நிபுணத்துவம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Govt drafts bill to set up Biotechnology Regulatory body". zeenews.india.com. மே 22, 2012. பார்க்கப்பட்ட நாள் மே 24, 2012.
  2. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=84347
  3. "Unconstitutional, unethical, unscientific". Pushpa M. Bhargava. த இந்து. திசம்பர் 28, 2011. பார்க்கப்பட்ட நாள் மே 24, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]