ராஜஸ்தான் அணுமின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசத்தான் அணு மின் நிலையம் இராசத்தான் மாநிலத்தில், ராவத்பாட்டா எனுமிடத்தில், அமைந்துள்ளது. இவ்விடம் கோட்டாவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில், சம்பல் ஆற்றின் அருகிலும், ராணா பிரதாப் சிங் ஏரியை உள்ளடக்கிய அணையின் அருகாமையிலும் நிலைகொண்டுள்ளது. 1980 ஆம் ஆண்டுகளில் கோட்டாவில் பாரமான நீர் தயாரிக்கும் ஆலை செயல்பட்டுவந்தது.

இராசத்தான் அணு மின் நிலையத்திற்கான திட்டப்பணிகள் 1968 ஆம் ஆண்டுகளில் துவங்கி, 1973 ஆம் ஆண்டில் முதல் 220 மெகா வாட் திறன் கொண்ட, காண்டு (CANDU) வகையிலான, அணு சக்தி உலைகள் கானடா நாட்டின் உதவியுடன் செயல்பட்டது. உயரழுத்தம் கொண்ட அணு சக்தி உலைகள் முதல் முதலாக இங்கு தான் செயல்பட்டது.[1] 1974 ஆம் ஆண்டில் போக்ரானில் இந்தியா அணு சக்தி ஆய்வுகள் நடத்தியதன் விளைவாக கானாடா நாட்டினர் இத்திட்டத்தில் இருந்து விலகினர். அதனால் இதே திறனுடன் கூடிய இரண்டாவது உலையை காலதாமதமாக 1981 ஆம் ஆண்டில் தான் இயக்க முடிந்தது. முதலில் கட்டிய உலையின் திறனும் படிப்படியாக குறைந்து தற்பொழுது 100 மெகா வாட் அளவுக்குக் குறைந்து செயல்படுகிறது.

அதற்குப் பின்னால் இங்கு மேலும் 220 மெகா வாட் திறன் கொண்ட, இரு அணு சக்தி உலைகள் முறையே 1999 ஆம் ஆண்டிலும், 2000 ஆம் ஆண்டிலும் செயல்பட துவங்கின. தற்பொழுது 220 மெகா வாட் திறன் கொண்ட, மேலும் இரு உலைகள் கட்டி 2010 ஆம் ஆண்டில் முடித்துள்ளனர். 700 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு சக்தி ஆலைகளை கட்டுவதற்கும் திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Canada, India reach nuclear deal". Montrealgazette.com. 2009-11-29. http://www.montrealgazette.com/news/Canada+India+reach+nuclear+deal/2281106/story.html பரணிடப்பட்டது 2009-11-30 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-08-22.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-08. பார்க்கப்பட்ட நாள் 2010-10-18.