நிதி ஆயோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துறை மேலோட்டம்
அமைப்பு1 சனவரி 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-01-01)
முன்னிருந்த
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது டெல்லி
அமைப்பு தலைமைகள்
மூல அமைப்புஇந்திய அரசு
வலைத்தளம்www.niti.gov.in

நிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதில் நிதி (NITI - National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இது 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இதன் தற்போதைய துணைத் தலைவராக சுமன் பெரி உள்ளார்.[1]

வரலாறு[தொகு]

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார். இதன்படி 2015, சனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.[2]

நிதி ஆயோக் அமைப்பு[தொகு]

இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.[2]

செயல்பாடுகள்[தொகு]

  • தேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைகள் செய்வது

வெளியீடுகள்[தொகு]

நிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறது.

பள்ளி கல்வி தரக் குறியீடு,2019[தொகு]

பள்ளி கல்வி தரக் குறியீடு 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .உலக வங்கி பிரதிநிதிகள், கல்வியாளர்கள்கொண்ட குழு 2015-16, 2016-2017 ஆம் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.[3]

அளவுருக்கள்[தொகு]

  • மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,
  • பள்ளி சேர்க்கை,
  • பங்களிப்பு,
  • உள்கட்டமைப்பு,
  • ஆசிரியர்கள் வசதி,
  • நிர்வாக நடவடிக்கைகள்

என பலவகையிலும் சேர்த்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வரிசைப்படுத்தும் முறை[தொகு]

இதற்காக பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரித்து வரிசைப்படுத்தி உள்ளது.

தர வரிசை[தொகு]

மொத்தம் உள்ள 20 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரளாவின் பள்ளி கல்வித்தரம் 76.6 சதவீதமாக உள்ளது.அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் 72.8 சதவீதம், கர்நாடகம் 69.5 சதவீதம், குஜராத் 61.9 சதவீதம், அசாம் 60.29 சதவீதம், மராட்டியம் 57.43 சதவீதம், தமிழ்நாடு 56.37 சதவீதம் என உள்ளன. இதில் தமிழ்நாடு 7 வது இடத்தில் உள்ளது. மிகவும் குறைவாக உத்தரபிரதேசம் 36.4 சதவீதமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinamani.com/latest_news/2015/01/05/திட்டக்குழுவிற்கு-மாற்றான-/article2604871.ece
  2. 2.0 2.1 http://economictimes.indiatimes.com/news/economy/policy/niti-aayog-being-decked-up-to-welcome-top-functionaries/articleshow/45807941.cms
  3. "School Education Quality Index" (PDF). Archived from the original (PDF) on 2019-10-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதி_ஆயோக்&oldid=3631395" இலிருந்து மீள்விக்கப்பட்டது