பேஷ்வா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேஷ்வா of மராத்தியப் பேரரசு | |
|---|---|
| முன்னாள் மன்னராட்சி | |
| மராத்தியப் பேரரசின் பொடி | |
| முதல் மன்னர் | மோரோபந்த் |
| கடைசி மன்னர் | இரண்டாம் பாஜி ராவ் |
| மன்னராட்சி துவங்கியது | 1657 |
| மன்னராட்சி முடிவுற்றது | 1818 |
பேஷ்வா (Peshwa) (மராத்தி:पेशवे) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். சத்ரபதி சிவாஜி தான் முதன் முதலில் அரசவையில் பேஷ்வா எனும் பதவியை உருவாக்கினார். பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர் வழிவழியாக இவர்கள் மராட்டியப் பேரரசைத் தலைமை தாங்கி நடத்தினர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். நானா சாகிப் கடைசி பேஷ்வாவான பாஜி ராவால் தத்தெடுக்கப்பட்டவர் ஆதலால் இவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.