ஒட்டாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒட்டாவா
நகரம்
ஒட்டாவா நகரம்
Ville d'Ottawa
நாடாளுமன்றக் குன்றில் மைய வளாகம்,  ஒட்டாவா கீழ்நகரில் தேசிய போர் நினைவகம்,  கனடிய தேசிய காட்சியகம், ரிடொ கால்வாயும் லொரியர் கோட்டையும்.
நாடாளுமன்றக் குன்றில் மைய வளாகம், ஒட்டாவா கீழ்நகரில் தேசிய போர் நினைவகம், கனடிய தேசிய காட்சியகம், ரிடொ கால்வாயும் லொரியர் கோட்டையும்.
Flag of ஒட்டாவா
Flag
Coat of arms of ஒட்டாவா
Coat of arms
Nickname(s): பைடவுன்
Motto: "அட்வான்சு-ஒட்டாவா-ஆன் அவான்ட்"
இரு அலுவல் மொழிகளில் (ஒட்டாவா முன்னேறு)[1]
ஒன்ராறியோவில் ஒட்டாவாவின் அமைவிடம்
ஒன்ராறியோவில் ஒட்டாவாவின் அமைவிடம்
Ottawa is located in கனடா
Ottawa
Ottawa
கனடாவில் ஒட்டாவாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 45°25′15″N 75°41′24″W / 45.42083°N 75.69000°W / 45.42083; -75.69000
நாடு  Canada
மாகாணம்  Ontario
வலயம் தேசிய தலைநகர் வலயம்
நிறுவல் பைடவுனாக 1826[2]
இணைப்பு 1 சனவரி 2001
அரசாங்க
 • மேயர் ஜிம் வாட்சன்
 • நகர மன்றம் ஒட்டாவா நகர மன்றம்
 • நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பரப்பு[3][4][5]
 • நகரம் 2,778.13
 • Urban 501.92
 • Metro 5.00
Elevation 70
மக்கள் (2011)[3][5]
 • நகரம் 8,83,391
 • அடர்த்தி 316.6
 • நகர்ப்புறம் 9,33,596
 • நகர்ப்புற அடர்த்தி 1.1
 • பெருநகர் பகுதி 12,36,324
 • பெருநகர அடர்த்தி 196.6
நேர வலயம் கிழக்கத்திய நேர வலயம் (UTC−5)
 • Summer (DST) ஈடிடி (UTC-4)
அஞ்சல் குறி வீச்சு K0A, K1A-K4C[1]
தொலைபேசி குறியீடு 613, 343
Website www.ottawa.ca

ஒட்டாவா (Ottawa, கேட்கi/ˈɒtəwə/ or /ˈɒtəwɑː/) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன.[6] 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 808,391 ஆகும்.

1826இல் பைடவுண் என நிறுவப்பட்டு பின்னர் 1855இல் "ஒட்டாவா"வாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஒட்டாவா கனடாவின் அரசியலுக்கும் தொழினுட்பத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்த இதன் எல்லைகள் பல்வேறு சிறு இணைப்புகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டு 2001இல் புதிய நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. "ஒட்டாவா" என்ற பெயர் உள்ளூர் மொழியில் அடவே என்பதிலிருந்து வந்துள்ளது; இதன் பொருள் "வணிகமாடல்" என்பதாகும்.[7]

துவக்கத்தில் அயர்லாந்திய, பிரான்சிய கிறித்தவர்களாலான குடியேற்றம் தற்போது பலவகை மக்கள் வாழும் பன்முக பண்பாடுடை நகரமாக விளங்குகிறது. கனடாவில் மிகவும் படித்தவர்கள் வாழும் நகரமாக ஒட்டாவா விளங்குகிறது. இங்கு பல உயர்நிலை கல்வி, ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயர்ந்த வாழ்க்கைத்தரமும் குறைந்த வேலையற்றோர் தொகையும் கொண்டதாக உள்ளது. வாழ்க்கைத்தரத்திற்கான மெர்செர் மதிப்பீட்டில் (221 நகரங்களில்) 14வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரிடொ கால்வாய் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Art Montague (2008). "Ottawa Book of Everything". MacIntyre Purcell Publishing. பார்த்த நாள் 14 July 2011.
  2. 2.0 2.1 Justin D. Edwards; Douglas Ivison (2005). Downtown Canada: Writing Canadian Cities. University of Toronto Press. p. 35. ISBN 978-0-8020-8668-6. http://books.google.com/books?id=0bD75NCOS18C&pg=PA35. 
  3. 3.0 3.1 "Population and dwelling counts, for Canada and census subdivisions (municipalities), 2006 and 2011 censuses — 100% data". Statistics Canada. பார்த்த நாள் 10 February 2010.
  4. "Population and dwelling counts, for Canada, provinces and territories, and urban areas, 2006 and 2001 censuses – 100% data". Statistics Canada (5 November 2008). பார்த்த நாள் 23 September 2011.
  5. 5.0 5.1 "Population and dwelling counts, for census metropolitan areas, 2006 and 2011 censuses – 100% data". Statistics Canada (5 November 2008). பார்த்த நாள் 23 September 2011.
  6. "National Capital Act (R. S. C., 1985, c. N-4)". Department of Justice (22 June 2011). பார்த்த நாள் 8 July 2011.
  7. Alan Rayburn (2001). Naming Canada: Stories About Canadian Place Names. University of Toronto Press. p. 231. ISBN 978-0-8020-8293-0. http://books.google.com/books?id=aiUZMOypNB4C&pg=PA231. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டாவா&oldid=1747183" இருந்து மீள்விக்கப்பட்டது