தேசிய போர் நினைவகம் (கனடா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய போர் நினைவகம்
Monument commémoratif de guerre
கனடா
அனைத்துப் போரிலும் மடிந்த கனடியர்கள் க்கு
திறப்பு21 மே 1939
ஒட்டாவா, ஒன்ராறியோ, கனடா
வடிவமைப்புவெர்னான் மார்ச்சு

தேசிய போர் நினைவகம் (National War Memorial, அல்லது The Response) கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் கூட்டமைப்புச் சதுக்கத்தில் வெங்கலச் சிற்பங்களுடன் கூடிய கருங்கல் வெறுங்கல்லறை ஆகும்; இது கனடாவின் கூட்டரசு போர் நினைவகமாக விளங்குகிறது.[1]

துவக்கத்தில் முதல் உலகப் போரை நினைவுறுத்துவதற்காக கட்டப்பட்ட இக்கல்லறை 1982இல் இரண்டாம் உலகப் போர், கொரியப் போர்களில் மடிந்தவர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. 2000இல், இவ்வளாகத்தில் அடையாளம் காணா வீரர்களுக்கான கனடிய கல்லறையும் எழுப்பப்பட்டது. இதன்மூலம் இந்த நினைவகம் கனடாவிற்காக மடிந்த அல்லது வருங்காலத்தில் உயிர் துறக்கவுள்ள அனைத்து கனடியர்களையும் கௌரவிக்கின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "ottawakiosk.com". Archived from the original on 3 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 8 January 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)