ஏப்ரல் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2 ஏப்ரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 93ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1804 - போர்த்துக்கலில் அப்பல்லோ என்ற கப்பல் மூழ்கியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
- 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
- 1902 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.
- 1902 - ரஷ்ய பேரரசின் உள்நாட்டமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1930 - ஹைலி செலசி எதியோப்பியாவின் மன்னராக முடி சூடினார்.
- 1972 - நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.
- 1975 - வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
- 1975 - கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.
- 1982 - போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனா முற்றுகையிட்டது.
- 1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
- 1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 2007 - சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 2007 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1862 - நிக்கொலஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1947)
- 1881 - வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
- 1981 - மைக்கல் கிளார்க், ஆஸ்திரேலிய [துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர்
இறப்புகள் [தொகு]
- 1914 - போல் ஹெயிஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் (பி. 1830)
- 1928 - தியோடர் ரிச்சார்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் (பி. 1868)
- 2006 - பி. வி. பார்த்தசாரதி, குமுதம் இதழ் நிறுவனர்
- 2012 - எம். சரோஜா, நகைச்சுவை நடிகை