அக்டோபர் 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(7 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 7 கிரிகோரியன் ஆண்டின் 280வது நாளாகும். நெட்டாண்டுகளில் 281வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1690 - ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர்.
- 1737 - இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
- 1769 - ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான்.
- 1806 - ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது.
- 1840 - இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1874 - யாழ்ப்பாணத்துக்கான தந்தி இணைப்பு அநுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டது.
- 1919 - நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி ருமேனியாவைத் தாக்கியது.
- 1942 - அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் அவையை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தன.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கைதிகள் 100 பேரை ஜப்பான் கொன்றது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: அவுஷ்விட்ஸ் வதை முகாமில் யூதக் கைதிகளின் கிளர்ச்சி இடம்பெற்றது.
- 1949 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
- 1950 - சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
- 1951 - மலேயத் தீவிரவாதிகள் பிரித்தானிய தூதுவர் சேர் ஹென்றி கேர்னி என்பவரைக் கொன்றனர்.
- 1951 - இஸ்ரேலிய அரசு டேவிட் பென்-கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது.
- 1958 - பாகிஸ்தான் அதிபர் இஸ்காண்டர் மிர்சா ஜெனரல் அயூப் கான் ஆதரவுடன் 1956 அரசமைப்பை நிராகரித்து இராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தார்.
- 1959 - சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
- 1962 - சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது.
- 1963 - எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றை சூறாவளி ஃபுளோரா தாக்கியதில் 7,190 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 - ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. வலிமையான கான்கீரிட் கட்டிடங்களையும் ஊடுருவி தாக்கும் டொமஹாக் ரகஏவுகணைகளை ஏவியது.
- 2004 - கம்போடியாவின் நொரொடொம் சிஹானூக் மன்னர் பதவியில் இருந்து விலகினார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1931 - டெஸ்மண்ட் டூட்டு, தென்னாபிரிக்க ஆயர், நோபல் பரிசு பெற்றவர்
- 1952 - விளாடிமிர் பூட்டின், ரஷ்ய முன்னாள் அதிபர்
- 1978 – சகீர் கான் , இந்திய வேகபந்து வீச்சாளர்.
- 1979 - நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள் [தொகு]
- 1708 - குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (பி. 1666)
- 1967 - நோர்மன் ஏஞ்செல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
- 1974 - சி. மு. இராசமாணிக்கம், முன்னாள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினர்
- 1984 - அப்துல் காதர் லெப்பை, ஈழத்துக் கவிஞர் (பி. 1913)
- 1994 - நீல்ஸ் காஜ் ஜேர்ன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)