புளியங்குடி க. பழனிச்சாமி
| புளியங்குடி க.பழனிச்சாமி | |
| அரசியல் கட்சி | மதிமுக |
|---|---|
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 7, 1938 புளியங்குடி |
| இறப்பு | பெப்ரவரி 4 2007 (அகவை 68) |
| வாழ்க்கைத் துணை |
இராமலட்சுமி |
| பிள்ளைகள் | 2 மகன், 3 மகள் |
| இருப்பிடம் | புளியங்குடி |
புளியங்குடி க.பழனிச்சாமி (Puliangudi Palanisamy, பி. 1938) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் பேச்சாளர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது 13 வது வயதில் பெரியார் மற்றும் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நகைச்சுவைப் பேச்சாளரான இவர் திமுகவின் தொடக்கத்திலிருந்து அதன் பேச்சாளராகப் பணியாற்றினார். திமுக-வின் ஆரம்ப கால பேச்சாளர்களுள் ஒருவராக இருந்தார். மு. கருணாநிதியால் திமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டார். பின்பு தி.மு.கவில் புளியங்குடி நகரச் செயலாளராகவும், 1987 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் , திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி என இரு மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட போது திருநெல்வேலி மாவட்ட இணைச் செயலாளரகவும், அதன் பின் மாவட்ட அவைத்தலைவராகவும் , மாநிலக் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். அதன் பிறகு, மதிமுகவின் அரசியல் ஆலோசகராகவும் நெல்லை மாவட்ட அவைத்தலைவராகவும் கட்சியில் பணியாற்றி 2007 ஆம் ஆண்டு இறந்தார்.
வெளியிணைப்புகள் [தொகு]
- ம.தி.மு.க
- புளியங்குடி க.பழனிச்சாமி in 60-ம் மணிவிழா
- புளியங்குடி க.பழனிச்சாமி' புகைப்படங்கள்
- புளியங்குடி பழனிச்சாமி இறுதிச்சடங்கில் வைகோ
- மதிமுக நடைபயண துவக்கவிழாவில் புளியங்குடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் - நெல்லை
- டி.ஏ.கே. இலக்குமணன் வீட்டு முன்பு புளியங்குடி க.பழனிச்சாமி கொடியேற்றினார்
- சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு. அ .பழனிசாமி பி.காம் அவர்களின் கட்டுரை